1
|
கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும். யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள். அடிமைப்பட் டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும். |
2
|
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்! அவர்கள் பாவங்களை போக்கிவிடும்! |
3
|
கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர்Ԕ நிறுத்தும். கடுங்கோபமாக இராதேயும். |
4
|
எங்கள் தேவனும் இரட்சகருமானவரே, எங்க ளிடம் கோபமாயிருப்பதை விட்டு விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். |
5
|
நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ? |
6
|
தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும். உமது ஜனங்களை சந்தோஷப்படுத்தும். |
7
|
கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும். நீர் எங் களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும். |
8
|
தேவனாகிய கர்த்ர்கூறியதை நான் கேட்டேன். அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர் களுக்கும் சமாதானம் உண்டா குமென்று கர்த் தர் கூறினார். எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது. |
9
|
தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார். நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம். |
10
|
தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும். நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த் தும். |
11
|
பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையான வர்களாயிருப்பார்கள். பரலோகத்தின் தேவ னும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார். |
12
|
கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார். நிலம் பல நல்ல பயிர்களை விளை விக்கும். |
13
|
நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும். அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும். |
Psalms 85:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...