இறைமக்களுக்காகச் செய்யப்படும் தண்டலைக் குறித்து உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது: கலாத்திய நாட்டுச் சபைகளுக்கு நான் தந்த திட்டத்தை நீங்களும் பின்பற்றுங்கள்.
நான் வரும்போது நீங்கள் யாரைத் தகுதியுள்ளவர்கள் எனக் குறிப்பிடுவீர்களோ அவர்களிடம் அறிமுகக் கடிதம் கொடுத்து, உங்கள் நன்கொடையை யெருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.
தீமோத்தேயு வந்தால், உங்களால் அவருக்கு எவ்விதக் கவலையும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் அவரும் என்னைப்போல் ஆண்டவரின் வேலையைத்தான் செய்கிறார்.
யாரும் அவரை இழிவாக எண்ணக் கூடாது; அவர் அங்கிருந்து என்னிடம் திரும்பி வரும்போது அன்போடு அனுப்பிவையுங்கள்; நானும் சகோதரர்களும் அவருக்காகக் காத்திருக்கிறோம்.
நம் அப்பொல்லோவைப்பற்றிக் கேட்டீர்களே, அவர் சகோதரர்களுடன் உங்களிடம் வரும்படி மிகவும் கேட்டுக்கொண்டேன்; ஆனால் இப்பொழுது வர அவருக்கு மனமே இல்லை; வாய்ப்புக் கிடைக்கும்பொழுது வருவார்.
சகோதரர்களே, இன்னுமொரு வேண்டுகோள்: ஸ்தேபனாவின் வீட்டாரை நீங்கள் அறிவீர்கள்,. அவர்கள் தாம் அக்காயா நாட்டின் முதற்கனி; இறைமக்களுக்குப் பணிபுரியத் தங்களையே கையளித்தனர்.
ஆசிய நாட்டுச் சபைகள் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன; ஆக்கிலாவும் பிரிஸ்காளும், இவர்களது வீட்டில் கூடுகின்ற சபையினரும் ஆண்டவருக்குள் உங்களுக்கு வாழ்த்துப் பல கூறுகிறார்கள். சகோதரர் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்;