ஆனால் நீங்கள் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஆணுக்குக் தலையாய் இருப்பவர் கிறிஸ்து பெண்ணுக்குத் தலையாய் இருப்பவன் ஆண், கிறிஸ்துவுக்குத் தலையாய் இருப்பவர் கடவுள்.
ஆனால் செபிக்கும்போது அல்லது இறைவாக்குக் கூறும்போது தலைக்கு முக்காடிடாத பெண் எவளும் தன் தலையை இழிவுபடுத்துகிறாள். அது அவள் தலையை மழித்துவிட்டதுபோலாகும்.
இந்த அறிவுரைகளை நான் கூறும்போது வேறொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்; அது உங்களுக்குப் பெருமை தராது. நீங்கள் ஒன்று கூடும்போது உங்களுக்கு நன்மையை விடத் தீமையே விளைகிறது.
உண்டு குடிக்க உங்களுக்கு வீடு இல்லையா? அல்லது இல்லாதவர்களை நாணச்செய்து கடவுளின் சபையை இழிவுபடுத்துகிறீர்களா? என்ன சொல்வது உங்களைப் புகழ்வதா? இதில் உங்களை எப்படிப் புகழ்வது?
ஏனெனில், நான் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டது இதுவே - அதையே நான் உங்களுக்குக் கையளித்தேன் அதாவது, ஆண்டவராகிய இயேசு, தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் அப்பத்தை எடுத்து, நன்றி கூறி அதைப் பிட்டு:
அவ்வாறே உணவு அருந்திய பின் கிண்ணத்தையும் எடுத்து ' இக்கிண்ணம் எனது இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை. இதைப் பருகும் போதெல்லாம் என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார்.
அப்படியே ஆண்டவரின் தீர்ப்புக்குள்ளானாலும், அவர் நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார் என்பதே கருத்து. இவ்வுலகத்தோடு நாமும் அழிவுத்தீர்ப்பை அடையாதிருக்கவே அவ்வாறு செய்கிறார்.
பசிக்கு உண்பதானால் வீட்டிலேயே உண்ணுங்கள்; அப்போது, நீங்கள் கூடிவருவது தண்டனைத் தீர்ப்புக்கு உரியதாய் இராது. மற்றதெல்லாம் நான் வரும்போது ஒழுங்குபடுத்துகிறேன்.