Indian Language Bible Word Collections
Psalms 89:51
Psalms Chapters
Psalms 89 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 89 Verses
1
கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன். என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
2
கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன். உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
3
தேவன், “நான் தேர்ந்தெடுத்த அரசனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
4
தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன். என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.
5
கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர். வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும். ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும். பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.
6
பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை. “தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
7
தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார். அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள். அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள். அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள்.
8
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை. உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
9
நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர். அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும்.
10
தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர். உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.
11
தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை. உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
12
வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர். தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
13
தேவனே, உமக்கு வல்லமை உண்டு! உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே!
14
உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது. அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.
15
தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16
உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும். அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17
நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன். அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18
கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.
19
உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன். அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன்.
20
நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன். விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21
என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன். எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன்.
22
தேர்ந்தெடுத்த அந்த அரசனைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று. தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
23
அவனது பகைவர்களை நான் அழித்தேன். நான் தேர்ந்தெடுத்த அரசனைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.
24
நான் தேர்ந்தெடுத்த அரசனை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன். அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
25
நான் தேர்ந்தெடுத்த அரசனைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன். அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான்.
26
அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை. நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான்.
27
நான் அவனை என் முதற்பேறான மகனாக்குவேன். அவன் பூமியின் முதன்மையான அரசனாக இருப்பான்.
28
நான் தேர்ந்தெடுத்த அரசனை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும். அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29
அவன் குடும்பம் என்றென்றும் தொடரும், அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும்.
30
அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும், அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
31
நான் தேர்ந்தெடுத்த அரசனின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி, என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால்,
32
அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.
33
ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன். நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.
34
நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன். நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன்.
35
எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன். நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்!
36
தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும். சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும்.
37
சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும். வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று. அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.
38
ஆனால் தேவனே, நீர் தேர்ந்தெடுத்த அரசனிடம் கோபங்கொண்டு, அவனைத் தன்னந்தனியாகவிட்டீர்.
39
நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர். நீர் அரசனின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர்.
40
அரசனின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர். அவனது கோட்டைகளையெல்லாம் அழித்தீர்.
41
கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள். அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர்.
42
நீர் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர். அவனது பகைவர்கள் போரில் அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர்.
43
தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினீர். உமது அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை.
44
நீர் அவனை வெல்ல விடவில்லை. நீர் அவனது சிங்காசனத்தை தரையில் வீசினீர்.
45
நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர். நீர் அவனை அவமானப்படுத்தினீர்.
46
கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்? எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்? என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா?
47
என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும். குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படி நீர் எங்களைப் படைத்தீர்.
48
ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை. ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை.
49
தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே? நீர் தாவீதின் குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பதாக அவனுக்கு வாக்குப்பண்ணினீர்.
50
(50-51) ஆண்டவரே, உமது பணியாளை எவ்வாறு ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதைத் தயவாய் நினைவு கூரும். கர்த்தாவே, உமது பகைவரின் எல்லா அவமானச் சொற்களுக்கும் நான் செவிகொடுக்க நேரிட்டது. நீர் தேர்ந்தெடுத்த அரசனை அந்த ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள்.
51
கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்! ஆமென், ஆமென்!