1
|
தேவனாகிய கர்த்தாவே, நீரே எனது மீட்பர். இரவும் பகலும் நான் உம்மை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். |
2
|
தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும். இரக்கத்திற்காய் வேண்டும் என் ஜெபங்களுக்குச் செவிகொடும். |
3
|
இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது, நான் விரைவில் மரிப்பேன். |
4
|
ஏற்கெனவே ஜனங்கள் என்னை மரித்தவனைப் போன்றும் வாழ பெலனற்ற மனிதனைப் போன்றும் கருதி நடத்துகிறார்கள். |
5
|
மரித்தோரிடம் என்னைத் தேடிப்பாருங்கள். உங்களிடமிருந்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்தும் தொடர்பிழந்த நீங்கள் மறந்து போன மரித்த ஜனங்களில் ஒருவனைப் போலவும், கல்லறையில் கிடக்கும் பிணத்தைப்போலவும் நான் இருக்கிறேன். |
6
|
பூமியிலுள்ள அந்தத் துவாரத்தில் நீர் என்னை வைத்தீர். ஆம், நீர் என்னை இருண்ட இடத்தில் வைத்தீர். |
7
|
தேவனே, நீர் என்னிடம் கோபமாயிருந்தீர், என்னைத் தண்டித்தீர். |
8
|
என் நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தார்கள். யாரும் தொடவிரும்பாத ஒருவனைப்போன்றும் அவர்கள் என்னைவிட்டு விலகினார்கள். நான் வீட்டில் அடைக்கப்பட்டேன், நான் வெளியே செல்ல முடியவில்லை. |
9
|
என் எல்லாத் துன்பங்களுக்காகவும் அழுவதால் என் கண்கள் புண்படுகின்றன. தேவனே, உம்மிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன்! ஜெபதில் என் கரங்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன். |
10
|
கர்த்தாவே, மரித்தவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்துவீரா? ஆவிகள் எழுந்து உம்மைத் துதிக்குமா? இல்லை! |
11
|
கல்லறைகளில் இருக்கும் மரித்தோர் உமது அன்பைக் குறித்துப் பேசமுடியாது. மரித்தோரின் உலகத்திலுள்ளவர்கள் உமது உண்மையைக் குறித்துப் பேசமுடியாது. |
12
|
இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது. மறக்கப்பட்டோரின் உலகிலுள்ள மரித்தோர் உமது நன்மையைக் குறித்துச் சொல்ல முடியாது. |
13
|
கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டு மென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்! ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் உம்மிடம் ஜெபம் செய்கிறேன். |
14
|
கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்? ஏன் எனக்குச் செவிகொடுக்க மறுக்கிறீர்? |
15
|
என் இளமைப் பருவத்திலிருந்தே நான் சோர்ந்து நோயாளியாயிருக்கிறேன். உமது கோபத்தால் துன்புற்றேன், நான் திக்கற்றவன். |
16
|
கர்த்தாவே, நீர் என்னிடம் கோபம் கொண்டிருந்தீர். உமது தண்டனை என்னைக் கொன்று கொண்டிருக்கிறது. |
17
|
வலியும் நோயும் எப்போதும் என்னை வருத்துகின்றன. என் வலியிலும் நோயிலும் நான் அமிழ்ந்துகொண்டிருப்பதாக உணருகிறேன். |
18
|
கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர். இருள் மட்டுமே என்னிடம் நிலைகொண்டது. |
Psalms 88:8 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...