நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம். இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம். அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம்.
கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார். தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார். நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார். தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார்.
புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள். அவர்கள் அக்கதைகளைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள். இவ்வகையில் கடைசி தலைமுறையினர் வரைக்கும் எல்லோரும் சட்டத்தை அறிந்திருப்பார்கள்.
தங்கள் தேவனுடைய கட்டளைகளை ஜனங்கள் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்களானால், அந்தக் குழந்தைகள் அவர்களின் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள். அவர்கள் முற்பிதாக்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அந்த ஜனங்கள் பிடிவாதமாக இருந்தார்கள். அவர்கள் தேவ ஆவியானவருக்கு உண்மையாக இருக்கவில்லை.
(23-24) ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார். உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது. வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது.
(26-27) தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார். காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன. தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார். பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது.
ஆனால் தேவன் இரக்கமுள்ளவராயிருந்தார். அவர்கள் பாவங்களுக்காக அவர் அவர்களை மன்னித்தார். அவர் அவர்களை அழிக்கவில்லை. பலமுறை தேவன் அவரது கோபத்தை அடக்கிக் கொண்டார். தேவன் தாம் மிகுந்த கோபமடையாதபடி பார்த்துக்கொண்டார்.
அவர் தமது ஜனங்களைப் பத்திரமாக வழி காட்டி நடத்தினார். தேவனுடைய ஜனங்கள் அஞ்ச வேண்டியது எதுவுமில்லை. தேவன் அவர்களது பகைவர்களைச் செங்கடலில் அமிழச் செய்தார்.
பிற தேசத்தினரை அந்நாட்டிலிருந்து போகும்படியாக தேவன் கட்டாயப்படுத்தினார். தேவன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேசத்தில் அவரவர்களின் பங்கைக் கொடுத்தார். தேவன் ஒவ்வொரு இஸ்ரவேல் கோத்திரத்தினருக்கும் வசிப்பதற்கு வீட்டைத் தந்தார்.
இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்று அவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள். எறியும் வில்லைப்போன்று அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டார்கள்.
இறுதியாக, தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒரு மனிதனைப்போல நம் ஆண்டவர் எழுந்திருந்தார். அவர் மிகுதியாகத் திராட்சைரசத்தைப் பருகிய வீரனைப்போல காணப்பட்டார்.
தாவீது மந்தை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். ஆனால் தேவன் அவனை அவ்வேலையிலிருந்து அகற்றினார். தேவன் அவரது ஜனங்களைக் கவனிக்கும் வேலையை தாவீதுக்குக் கொடுத்தார். தேவனுடைய சொத்தாகிய யாக்கோபின் ஜனங்களையும் இஸ்ரவேலரின் ஜனங்களையும் கவனிக்கும் பொறுப்பை அவனுக்கு அளித்தார்.