1
|
தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன். தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். நான் சொல்வதைக் கேளும். |
2
|
என் ஆண்டவரே, தொல்லைகள் வரும்போது நான் உம்மிடம் வருகிறேன். இரவு முழுவதும் நான் உம்மை நெருங்க முயன்றேன். என் ஆத்துமா ஆறுதல் அடைய மறுத்தது. |
3
|
நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன், நான் உணரும் விதத்தை அவருக்குச் சொல்ல முயல்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. |
4
|
நீர் என்னை உறங்கவொட்டீர். நான் ஏதோ சொல்ல முயன்றேன், ஆனால் மிகவும் வருத்தமடைந்தேன். |
5
|
நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். முற்காலத்தில் நிகழ்ந்தவற்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். |
6
|
இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன். நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன். |
7
|
நான், "எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா? மீண்டும் அவர் எப்போதும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா? |
8
|
தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா? அவர் நம்மோடு மீண்டும் பேசுவாரா? |
9
|
இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா? அவரது நீடிய பொறுமை கோபமாயிற்றா?" என்று வியக்கிறேன். |
10
|
பின்பு நான், "என்னை உண்மையிலேயே பாதிப்பது இது. ‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?" என எண்ணினேன். |
11
|
கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன். தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன். |
12
|
நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன். அக்காரியங்களை நான் நினைத்தேன். |
13
|
தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை. தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை. |
14
|
அற்புதமானக் காரியங்களைச் செய்த தேவன் நீரே. நீர் ஜனங்களுக்கு உமது மிகுந்த வல்லமையைக் காண்பித்தீர். |
15
|
உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர். நீர் யாக்கோபையும் யோசேப்பின் சந்ததியினரையும் காத்தீர். |
16
|
தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது. ஆழமான தண்ணீர் பயத்தால் நடுங்கிற்று. |
17
|
கரு மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன. உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள். அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன. |
18
|
உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின. உலகத்தை மின்னல் ஒளியால் நிரப்பிற்று. பூமி அதிர்ந்து நடுங்கிற்று. |
19
|
தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர். நீர் ஆழமான கடலைக் கடந்தீர். ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை. |
20
|
உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர். |
Psalms 77:16 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...