1
|
தேவனே, என்றென்றும் நீர் எங்களைவிட்டு விலகினீரா? உமது ஜனங்களிடம் நீர் இன்னும் கோபமாயிருக்கிறீரா? |
2
|
பல்லாண்டுகளுக்கு முன் நீர் வாங்கிய உமது ஜனங்களை நினைவுகூரும். நீர் எங்களை மீட்டீர். நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள். நீர் வாழ்ந்த இடமாகிய சீயோன் மலையை நினைவுகூரும். |
3
|
தேவனே, பழைமையான இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் நீர் நடந்துவாரும். பகைவன் அழித்த பரிசுத்த இடத்திற்குத் திரும்ப வாரும். |
4
|
ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள். போரில் தங்கள் வெற்றியைக் குறிப்பதற்கு ஆலயத்தில் அவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றினார்கள். |
5
|
பகைப்படை வீரர்கள் கோடரியால் களைகளை அழிக்கும் ஜனங்களைப் போன்றிருந்தார்கள். |
6
|
தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி, உமது ஆலயத்தில் மரத்தினாலான சித்திர வேலைப்பாடுகளை நாசம் செய்தார்கள். |
7
|
அந்த வீரர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துவிடடார்கள். அந்த ஆலயம் உமது நாமத்தின் மகிமைக்காகக் கட்டப்பட்டது. அவர்கள் அதைத் தரையில் விழும்படி இடித்துத் தள்ளினார்கள். |
8
|
பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான். தேசத்தின் ஒவ்வொரு பரிசுத்த இடத்தையும் அவர்கள் எரித்தார்கள். |
9
|
எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை. எந்தத் தீர்க்கதரிசிகளும் இங்கு இல்லை. யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. |
10
|
தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்? உமது நாமத்தை அவர்கள் என்றென்றும் இழிவுபடுத்த நீர் அனுமதிப்பீரா? |
11
|
தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்? நீர் உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி, எங்களை முற்றிலும் அழித்துவிட்டீர். |
12
|
தேவனே, நீணடகாலம் நீரே எங்கள் அரசராக இருந்தீர். இத்தேசத்தில் பல போர்களில் வெல்ல நீர் எங்களுக்கு உதவினீர். |
13
|
தேவனே, நீர் மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி செங்கடலைப் பிளக்கச் செய்தீர். |
14
|
கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்! லிவியாதானின் தலைகளை நீர் சிதைத்துப்போட்டீர். பிற விலங்குகள் உண்ணும்படி அதன் உடலை விட்டுவிட்டீர். |
15
|
நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர். நதிகள் உலர்ந்து போகும்படியும் செய்கிறீர். |
16
|
தேவனே, நீர் பகலை ஆளுகிறீர். நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர். |
17
|
பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர். நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர். |
18
|
தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும். அம்மூடர்கள் உமது நாமத்தை வெறுக்கிறார்கள். |
19
|
அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்! என்றென்றும் உமது ஏழை ஜனங்களை மறந்துவிடாதேயும். |
20
|
நமது உடன்படிக்கையை நினைவுகூரும்! இத் தேசத்தின் ஒவ்வொரு இருண்ட இடத்திலும் கொடுமை நிகழ்கிறது. |
21
|
தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள். இனிமேலும் அவர்கள் துன்புறாதபடி பாரும். உமது திக்கற்ற, ஏழை ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள். |
22
|
தேவனே, எழுந்து போரிடும்! அம் மூடர்கள் உம்மோடு போட்டியிடுகிறார்கள் என்பதை நினைவுகூரும். |
23
|
உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும். மீண்டும் மீண்டும் அவர்கள் உம்மை இழிவுப்படுத்தினார்கள். |
Psalms 74:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...