1
|
பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். பாவங்கள் முடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். |
2
|
குற்றமற்றவன் எனக் கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். |
3
|
தேவனே, நான மீண்டும் மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன். ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை. நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று. |
4
|
தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர். கோடைக்காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன். |
5
|
என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன். கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன். என் குற்றங்கள் எதையும் நான் மறக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர். |
6
|
இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும். வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும். |
7
|
தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர். என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர். நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர். எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன். |
8
|
கர்த்தர், "நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன். உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார். |
9
|
எனவே குதிரையை அல்லது கழுதையைப் போல் மூடனாகாதே. அம்மிருகங்களை வழி நடத்துவோர் கடிவாளங்களையும் பயன்படுத்தாமல் அவற்றை கட்டுப்படுத்த இயலாது" என்கிறார். |
10
|
தீயோருக்கு வேதனைகள் பெருகும். கர்த்தரை நம்புவோரை தேவனுடைய உண்மையான அன்பு சூழ்ந்துகொள்ளும். |
11
|
நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள். பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களே! களிப்படையுங்கள். |
Psalms 32:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...