Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Psalms Chapters

Psalms 2 Verses

Bible Versions

Books

Psalms Chapters

Psalms 2 Verses

1 யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்? ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன?
2 அவர்களுடைய அரசர்களும், தலைவர்களும் கர்த்தரையும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள்.
3 அந்நாடுகளின் தலைவர்கள், "நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த அரசனையும் எதிர்த்துக் கலகம் செய்வோம். அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!" என்றார்கள்.
4 ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் அரசர், அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.
5 [This verse may not be a part of this translation]
6 [This verse may not be a part of this translation]
7 இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன். கர்த்தர் என்னிடம், "இன்று நான் உனக்குத் தந்தையானேன்! நீ எனக்கு மகன்.
8 நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன். பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!
9 இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்" என்றார்.
10 எனவே அரசர்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள். அரசாளுபவர்களே, இப் பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
11 மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்.
12 தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார். கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள். ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும். கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.

Psalms 2:6 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×