அந்தியோகியாவிலிருந்த சபையிலே இறைவாக்கினர்களும் போதகர்களும் இருந்தனர். அவர்கள், பர்னபா, நீகர் என்னும் சிமெயோன், சிரேனே ஊரான் லூகியு சிற்றரசன், ஏரோதுடன் வளர்ந்த மனாயீன், சவுல் என்பவராவர்.
ஒரு நாள் அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடுகையில் பரிசுத்த ஆவி, "சவுலையும் பர்னபாவையும் நான் தெரிந்தெடுத்த வேலைக்காக எனக்கென ஒதுக்கிவையுங்கள்" என்று அவர்களுக்குச் சென்னார்.
அவன் செர்குயுபவுலு என்ற ஆளுநனின் பரிவாரத்தில் ஒருவன். நல்லறிவுபடைத்த அவ்வாளுநன் பர்னபாவையும் சவுலையும் வரவழைத்து, கடவுளின் வார்த்தையைக் கேட்க ஆவலாயிருந்தான்.
ஆனால், எலிமா என்னும் அந்த மந்திரவாதி அவர்களை எதிர்த்து, ஆளுநன் விசுவசிப்பதைத் தடுக்க முயற்சி செய்தான். ( எலிமா என்பதற்கு மந்திரவாதி என்பதுதான் பொருள். )
இதோ! ஆண்டவரின் கை உன்மேல் ஓங்கியிருக்கிறது. நீ ஒளியைக் காணாது கொஞ்சகாலம் குருடனாயிருப்பாய்" என்றார். என்றதும் அவனுக்குப் பார்வை மங்கிற்று. இருள் அவனைச் சூழ்ந்தது. அவன் அங்குமிங்கும் தடவி, தனக்கு வழிகாட்ட ஓர் ஆள் தேடலானான்.
சின்னப்பரும் அவருடன் இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பல் ஏறி பம்பிலியாவிலுள்ள பெர்கே துறையை அடைந்தனர். அருளப்பர் அவர்களை விட்டுப் பிரிந்து யெருசலேமிற்குத் திரும்பினார்.
ஓய்வுநாளில் செபக்கூடத்திற்குப் போய் அமர்ந்தனர். திருச்சட்டமும் இறைவாக்குகளும் வாசித்து முடிந்தபின், செபக்கூடத் தலைவர்கள் அவர்களைப் பார்த்து, "சகோதரரே, மக்களுக்கு அறிவுரை கூற ஏதாவது இருந்தால் பேசலாம்" என்றனர்.
இஸ்ராயேலராகிய இம்மக்களின் கடவுள் நம் முன்னோரைத் தெரிந்தெடுத்தார். நம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறியபோது அவர்களை மேன்மைப்படுத்தினார். ஓங்கிய தம் கை வன்மையால் அவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றி,
பின்னர் அவர்கள் ஓர் அரசனை ஏற்படுத்துமாறு வேண்டவே, கீஸ் என்பவனின் மகன் சவுலைக் கடவுள் அரசனாக ஏற்படுத்தினார். அவன் பென்யமீன் குலத்தினன்; நாற்பது ஆண்டுகள் ஆண்டான்.
பிறகு கடவுள் அவனை நீக்கிவிட்டு, தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார். அவரைப்பற்றிக் கடவுள், ' யீசாயின் மகன் தாவீது என் மனத்துக்கு உகந்தவனாய் இருக்கக் கண்டேன். நான் விரும்பியதெல்லாம் அவன் செய்வான் ' என்று நற்சான்று கூறினார்.
தம் பணி முடிவுறும் காலத்தில் அருளப்பர், ' நீங்கள் என்னை யாரென நினைக்கிறீர்களோ, அவரல்ல நான். இதோ! ஒருவர் எனக்குப்பின் வருகின்றார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்க நான் தகுதியற்றவன் ' என்றார்.
அவரும் கலிலேயாவிலிருந்து தம்முடன் யெருசலேம் வந்திருந்தவர்களுக்குப் பல நாட்கள் தோன்றினார். அவர்கள் இப்போது மக்கள்முன் அவருக்குச் சாட்சியாக நிற்கின்றனர்.
இயேசுவைக் கடவுள் உயிர்ப்பித்து, நம் முன்னோருக்கு அளித்த வாக்குறுதியை அவர்களுடைய மக்களாகிய நமக்கென நிறைவேற்றினார். அதைப்பற்றியே இரண்டாம் சங்கீதத்தில், ' நீர் எம் புதல்வர், இன்று உம்மை யாம் ஈன்றெடுத்தோம் ' என்று எழுதியுள்ளது.
மேலும், அவர் என்றுமே அழிவுக்கு ஆளாகாதபடி, இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார் என்பதைப் பற்றித்தான், ' தாவீதுக்குக் கூறிய தவறாத வாக்குறுதிகளை உங்களுக்கென நிறைவேற்றுவேன் ' என்று உரைத்தபோது கூறினார்.
தம் முன்னோர்களுடன் புதைக்கப்பட்டு அழிவுற்றார். ஆனால் யாரைக் கடவுள் எழுப்பினாரோ, அவர் அழிவுறவில்லை. "எனவே, சகோதரரே, இவர் வழியாகவே பாவமன்னிப்பு உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
உங்கள் வாழ்நாளில் நான் ஒன்று செய்வேன். யார் சொன்னாலும் அதை நம்பமாட்டீர்கள் ' என்று இறைவாக்குகளின் நூலில் கூறியுள்ளது உங்களுக்கு நேராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
கூட்டம் கலைந்த பின்னர் யூதர் பலரும், யூதமறையைத் தழுவிய புறவினத்தவர் பலரும் சின்னப்பரையும் பர்னபாவையும் பின் தொடர்ந்தனர். இவ்விருவரும் அவர்களுடன் உரையாடி, கடவுளுடைய அருளில் நிலையாயிருக்கும்படி ஊக்குவித்தனர்.
சின்னப்பரும் பர்னபாவும் துணிவோடு, "முதலில் உங்களுக்குத்தான் கடவுளின் வார்த்தையைப் போதிக்கவேண்டியிருந்தது. ஆனால், நீங்கள் அதைப் புறக்கணித்து, முடிவில்லா வாழ்விற்குத் தகுதியற்றவர்கள் என நீங்களே உங்களுக்குத் தீர்ப்பிட்டுக் கொண்டீர்கள். ஆதலால், இதோ, நாங்கள் உங்களைவிட்டு, 'புறவினத்தார்பால் செல்கிறோம்.
ஏனெனில், ' உலகின் இறுதி எல்லைவரைக்கும் மீட்பைக் கொண்டு செல்ல புறவினத்தாருக்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினேன் ' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்" என்றனர்.