கடவுளின் ஞானத்தையே பேசுகிறோம். அதுவோ மறை பொருளான ஞானம், இது வரையில் அது மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது நமது மகிமைக்காக உலகம் உண்டாகு முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.
நாங்கள் அறிவிப்பதோ மறைநூலில் எழுதியுள்ளவாறு, ' கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது'.
மனிதனின் உள்ளத்தில் இருப்பதை மனிதனுக்குள் இருக்கும் அவன் ஆவியேயன்றி வேறு எவரும் அறியார். அவ்வாறே கடவுளின் உள்ளத்தில் இருப்பதைக் கடவுளின் ஆவியேயன்றி வேறெவரும் அறியார்.
அவற்றை நாங்கள் மனித ஞானம் கற்பிக்கும் சொற்களால் பேசாமல், ஆவியானவர் கற்பிக்கும் சொற்களால் பேசுகிறோம். இங்ஙனம், தேவ ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவிக்குரியவற்றை விளக்கியுரைக்கிறோம்.
மனித இயல்பால் மட்டும் இயங்குபவன் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவனுக்கு மடமையாகத் தோன்றும். அவற்றை அவனால் அறியவும் இயலாது. ஏனெனில், தேவ ஆவியைக் கொண்டு தான் அவற்றை மதித்துணர முடியும்.
அவனையோ, ஆவியைப் பெறாத எவனும் மதித்துணர முடியாது. 'ஆண்டவர் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை தரக்கூடியவர் யார்? ஆனால் நாம் கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.