Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Psalms Chapters

Psalms 98 Verses

Bible Versions

Books

Psalms Chapters

Psalms 98 Verses

1 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால் கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.
2 அவரது பரிசுத்த வலது கை மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
3 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார். கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.
4 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர். தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.
5 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள். துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
6 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள். சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.
7 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள். எங்கள் அரசராகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
8 கடலும் பூமியும் அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
9 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள். எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!

Psalms 98:9 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×