தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான். அத்தகைய மனிதர்கள் கெட்டவர்களாகவும் தீயவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதில்லை.
தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்! ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப் பதில்லை. தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார்.
ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள். அத்தீயோர் இஸ்ரவேலரின் பகைவர்கள். அத்தீயோரைக் தேவன் தள்ளிவிட்டார். எனவே தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள். அத்தீயோரின் எலும்புகளை தேவன் சிதறடிப்பார்.
சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக. தேவன், அவர்கள் வெற்றிபெற உதவுவார். அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது ஜனங்களை மீட்கும்போது யாக்கோபு களிகூருவான். இஸ்ரவேல் மிகுந்த மகிழ்ச்சிகொள்வான்.