இறை மக்கள் இவ்வுலகத்துக்குத் தீர்ப்பிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகமே உங்கள் முன் தீர்ப்புக்காக நிற்க வேண்டியிருக்க, சின்னஞ்சிறிய வழக்குகளைத் தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லாமல் போய்விட்டதா?
ஒருவன் மீது ஒருவன் வழக்குத் தொடர்வதே உங்களுக்கு ஒரு தோல்வி. அநியாயத்தை நீங்கள் ஏன் தாங்கிக்கொள்ளக் கூடாது? பிறர் உங்கள் பொருளை வஞ்சித்துக் கவர ஏன் விட்டுவிடக் கூடாது? மாறாக நீங்களே அநியாயம் செய்கிறீர்கள்.
இயற்கைக்கு மாறான பாவம் செய்வோர், அதற்கு உடன்படுவோர், திருடர், பொருளாசை பிடித்தவர், குடிகாரர், பழி பேசுவோர், கொள்ளைக்காரர் இவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது.
இத்தகையோர் உங்களிடையிலும் சிலர் இருந்தனர். ஆயினும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும், நம் கடவுளின் ஆவியாலும் உங்கள் பாவக் கறைகளைக் கழுவிப் போக்கிக் கொண்டீர்கள், பரிசுத்தரானீர்கள், இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டீர்கள்.
' எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு' என்கிறார்கள். - ஆனால் எல்லாமே பயன்தராது. எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு என்பது உண்மைதான். ஆனால் எதற்கும் நான் அடிமையாக மாட்டேன்.
" உணவு வயிற்றுக்கென்றே உள்ளது; வயிறு உணவுக்கென்று உள்ளது" என்கிறீர்கள். ஆம், கடவுள் இரண்டையும் அழித்துவிடுவார். ஆனால், உடல் காமத்திற்கென்று இல்லை. ஆண்டவருக்கென்று இருக்கிறது. ஆண்டவரும் உடலுக்கே.
உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் அந்த ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டீர்கள். ஆகவே, நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல,