இறைவாக்கு வரம் எனக்கு இருப்பினும் மறைபொருள் யாவும் எனக்குத் தெரிந்தாலும் அறிவு அனைத்தும் எனக்கு இருந்தாலும் மலைகளைப் பெயர்த்தகற்றும் அளவுக்கு விசுவாசம் என்னிடம் நிறைந்திருப்பினும் அன்பு எனக்கு இல்லையேல், நான் ஒன்றுமில்லை.
அன்புக்கு என்றும் முடிவு இராது; இறைவாக்கு வரம் எது இருந்தாலும், அது ஒருநாள் இல்லமாற்போகும்; பரவசப் பேச்சு வரம் இருந்தால், அதுவும் முற்றுப்பெறும்; அறிவு வரம் இருந்தால், அதுவும் ஒருநாள் இல்லாமற் போகும்.
நான் குழந்தையாய் இருந்தபோது, குழந்தையின் பேச்சு குழந்தையின் மனநிலை குழந்தையின் எண்ணம் கொண்டிருந்தேன். நான் பெரியவனாய் வளர்ந்த பின்னர், குழந்தைக்குரியதைக் களைந்துவிட்டேன்.
இப்பொழுது கண்ணாடியில் மங்கலாகக் காண்கிறோம்; அப்பொழுது முகமுகமாய்க் காண்போம். இப்பொழுது அரை குறையாய் அறிகிறேன்; அப்பொழுது கடவுள் என்னை அறிவதுபோல் நானும் அறிவேன்.