தேவன் அவரது ஆலயத்தில் பேசினார்: “நான் யுத்தத்தில் வென்று, அவ்வெற்றியால் மகிழ்வேன்! இந்நாட்டை எனது ஜனங்களோடு பகிர்ந்துகொள்வேன். அவர்களுக்கு சீகேமைக் கொடுப்பேன். அவர்களுக்கு சுக்கோத் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.
(9-10) தேவனே நீர் எங்களை விட்டு விலகினீர்! வலிய, பாதுகாவலான நகரத்திற்குள் யார் என்னை அழைத்துச் செல்வார்? ஏதோமிற்கு எதிராகப் போர் செய்ய யார் என்னை வழி நடத்துவார்? தேவனே, நீர் மட்டுமே எனக்கு உதவக்கூடும். ஆனால் நீரோ எங்களை விட்டு விலகினீர்! நீர் எங்கள் சேனையோடு செல்லவில்லை.