"இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மகிமையையும் உமக்குக் கொடுப்பேன். ஏனெனில், இவை யாவும் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 'என் விருப்பம்போல் எவருக்கும் இவற்றைக் கொடுக்கமுடியும்.
'ஆண்டவருடைய ஆவி என்மேலே, ஏனெனில், என்னை அபிஷுகம் செய்துள்ளார். 'எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு வழங்கவும்,
பின் அவர் அவர்களை நோக்கி, "' மருத்துவனே, உன்னையே குணமாக்கிக்கொள் ' என்ற பழமொழியை எனக்கே சொல்லிக்காட்டி, ' கப்பர்நகூம் ஊரில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம், உம் சொந்த ஊராகிய இங்கேயும் செய்யும் ' எனக் கண்டிப்பாக நீங்கள் கூறுவீர்கள் " என்றார்.
உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாசின் காலத்தில் மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்களாக வானம் வறண்டு நாடெங்கும் பஞ்சம் உண்டானபோது, இஸ்ராயேல் நாட்டில் கைம்பெண்கள் பலர் இருந்தனர்.
இறைவாக்கினரான எலிசேயுவின் காலத்திலும் இஸ்ராயேல் நாட்டில் தொழுநோயாளர் பலர் இருந்தனர். ஆயினும் சீரியா நாட்டு நாமானைத் தவிர வேறு எவரும் குணமாக்கப்படவில்லை " என்றார்.
அவன், " ஐயோ! நாசரேத்தூர் இயேசுவே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர் ? எங்களைத் தொலைக்க வந்தீரோ ? நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர் " என்று உரக்கக் கத்தினான்.
அப்போது இயேசுவா, " பேசாதே, இவனை விட்டுப் போ " என்று அதட்டினார். அப்பொழுது, அப்பேய் அவனை அவர்கள்நடுவே வீழ்த்தி, அவனுக்கு ஒரு தீங்குமிழைக்காமல் அவனை விட்டு அகன்றது.
அதனால் திகில் எல்லாரையும் ஆட்கொள்ள, " இவர் வார்த்தை எத்தகையதோ ? அதிகாரத்தோடும் வல்லமையோடும் இவர் அசுத்தப் பேய்களுக்கும் கட்டளையிடுகிறார், அவை போய்விடுகின்றனவே! " என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
பின்னர், அவர் செபக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்கு வந்தார். சீமோனுடைய மாமியார் கடுஙகாய்ச்சலால் துன்பப்பட்டுக் கொண்டிருந்ததால் அவளுக்காக அவரிடம் வேண்டினர்.
பொழுது புலரவே, அவர் புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடினர். அவரிடம் வந்ததும் தங்களை விட்டு அகலாதபடி அவரை நிறுத்தப்பார்த்தனர்.