பொழுது விடிந்த போது, அஞ்சித் திடுக்கிட்டு, எகிப்து நாட்டிலுள்ள எல்லா மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரவழைத்துக் கனவை விவரித்துச் சொன்னான். ஆனால், அதன் பொருளைச் சொல்ல ஒருவராலும் கூடாது போயிற்று.
அதைக் கேட்டு அரசன் சூசையை அழைத்து வரக் கட்டளையிட்டான். காவற் கிடங்குகளிலிருந்து அவனை விரைவில் கொண்டு வந்து, சவரம் பண்ணிப் புத்தாடை அணிவித்து, அரசன் முன் நிறுத்தினர்.
அரசன் அவனை நோக்கி: நான் கனவுகள் கண்டேன். அவற்றின் பொருளைச் சொல்ல ஒருவருமில்லை. நீயோ, அப்படிப்பட்டவற்றிற்கு மிக்க அறிவு நுணுக்கத்தோடு பொருள் சொல்ல வல்லவன் என்று கேள்விப் பட்டேன் என்றான்.
ஆயினும், சிறிதுகூட வயிறு புடைக்காமல் முன்போலவே எலும்பும் தோலுமாகத் தள்ளாடிக் கொண்டிருந்தன. நான் அந்நேரம் விழித்துக் கொண்டு, மறுபடியும் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்தவனாய்,
இவை முன் சொன்ன எழிலும் செழுமையும் உள்ள நல்ல கதிர்களை விழுங்கிவிட்டன. இக்கனவை நான் மந்திரவாதிகளிடம் சொன்னேன். ஆனால், அதன் பொருளைச் சொல்ல எவனாலும் இயலவில்லை என்றான்.
நீர் கண்ட இரண்டாவது கனவும் மேற்சொன்ன நிகழ்ச்சியைக் குறித்ததேயாம். அது கடவுளால் செய்யப்படுமென்றும், மிக விரைவில் நிறைவேறுமென்றும் சொல்வதற்கு ஆதாரமாய் இருக்கிறது.
இப்போதே வரவிருக்கும் ஆண்டுகளிலே களஞ்சியங்களில் சேமித்து வைக்கக்கடவான். இவ்விதமாய், விளையும் தானியங்களெல்லாம் பாரவோன் அதிகாரத்தால் நகரங்களிலே சேகரிக்கப் பட்டிருக்க வேண்டும்.
நீரே என் அரண்மனைக்குத் தலைவனாய் இருப்பீர். உமது கட்டளைக்கு மக்கள் எல்லாரும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். அரியணையைப் பொறுத்த மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன் என்றான்.
தன் கையினின்று முத்திரை மோதிரத்தைக் கழற்றி அதை அவன் கையில் போட்டு, மெல்லிய பட்டு நூலால் நெய்யப்பட்ட ஓர் ஆடையை அவனுக்கு உடுத்தி, பொன் கழுத்தணியை அவன் கழுத்திலே மாட்டி,
அவனைத் தன் இரண்டாம் தேரின்மேல் ஏற்றி: இவரைத் தெண்டனிட்டுப் பணியுங்கள். இவரே எகிப்து நாடு முழுவதற்கும் தலைவன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்று கட்டியக்காரன் கூறும்படி (கட்டளையிட்டான்).
பின், (பாரவோன்) அவனுடைய பெயரையும் மாற்றி, எகிப்திய மொழியில் அவனைப் பூபாலன் என்று அழைத்து, எலியோப்பொலிஸின் குருவாகிய புத்திபாரே என்பவன் புதல்வியான ஆஸ்னேட்டை அவனுக்கு மனைவியாக அளித்தான். அப்போது சூசை எகிப்து நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.
பஞ்சம் சூழ்ந்த போது, எகிப்திய மக்கள் உணவுக்காகப் பாரவோனிடம் வந்து ஓலமிட, அவன்: சூசையிடம் சென்று, அவர் உங்களுக்குச் சொல்கிறபடி செய்யுங்கள் என்று அவர்களை அனுப்பி வந்தான்.
வரவர எல்லா நாடுகளிலும் பஞ்சம் அதிகமாகிவிட்டது. ஆகையால், சூசை களஞ்சியங்களைத் திறந்து, எகிப்தியர்களுக்குத் தானியங்களை விலைக்குக் கொடுத்து வந்தார். ஏனென்றால், அவர்களும் பஞ்சத்தால் வருந்தினார்கள்.