இவை நிகழ்ந்த பின், எகிப்து மன்னனுக்குப் பானம் அமைப்போர் தலைவனும் அப்பம் படைப்போர் தலைவனும் ஆகிய அண்ணகர் இருவர் தங்கள் மன்னனுக்கு எதிராகக் குற்றஞ் செய்தனர்.
நாங்கள் கனவு கண்டோம்; அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வாரில்லை என்று பதில் கூறினர். சூசை அவர்களை நோக்கி: கனவுக்குப் பொருள் சொல்வது கடவுளுக்குரியதல்லவா? நீங்கள் கண்டவற்றை என்னிடம் விவரித்துச் சொல்லுங்கள் என்றான்.
என் கையிலே பாரவோனுடைய பானப்பாத்திரம் இருந்தது, நான் பழங்களைப் பறித்து என் கையிலிருந்த பாத்திரத்தில் பிழிந்து, (அப்) பானத்தைப் பாரவோனுக்குக் கொடுத்தேன் என்றான்.
அவை கழிந்த பின் பாரவோன் உன் சேவையை மனத்தில் கொண்டு, மீண்டும் முந்தின பதவியிலே உன்னை வைப்பார். நீ முன் செய்து வந்தது போல், உன் பதவியின் முறைப்படி அவருக்குப் பானப் பாத்திரத்தைக் கையில் கொடுப்பாய்.
அப்பத் தலைவனும், அந்தக் கனவின் பொருளை (சூசை) அறிவுக்குப் பொருத்தச் சொல்லியதைக் கண்டு, அவனை நோக்கி: நானும் கனவிலே மூன்று மாவுக் கூடைகளை என் தலையில் வைத்திருந்தேன்.
அம்மூன்று நாட்களுக்குப் பின், பாரவோன் உனது தலையை வெட்டி உன்னை ஒரு தூக்கு மரத்திலே தொங்க வைப்பார். அப்பொழுது பறவைகள் வந்து உனது உடலைக் கிழித்துத் தின்னும் என்றான்.
அம்மூன்று நாட்களுக்குப் பின், பாரவோன் உனது தலையை வெட்டி உன்னை ஒரு தூக்கு மரத்திலே தொங்க வைப்பார். அப்பொழுது பறவைகள் வந்து உனது உடலைக் கிழித்துத் தின்னும் என்றான்.