Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Luke Chapters

Luke 17 Verses

Bible Versions

Books

Luke Chapters

Luke 17 Verses

1 இயேசு தன் சீஷர்களை நோக்கி, மக்கள் பாவம் செய்யும்படியான காரியங்கள் நிச்சயமாக நடக்கும். ஆனால் இது நடக்கும்படியாகச் செய்கிறவனுக்குத் தீமை விளையும்
2 பலவீனமான மனிதர்கள் பாவம் செய்யும்படியாகச் செய்கிற ஒருவனுக்குத் தீமை விளையும். அவன் கழுத்தில் அரைக்கிற கல்லைக் கட்டி அவனைக் கடலில் அமிழ்த்துவது அவனுக்கு நல்லதாக இருக்கும்.
3 எனவே எச்சரிக்கையாக இருங்கள்! உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள். ஆனால் அவன் வருந்திப் பாவம் செய்வதை விட்டுவிட்டால், அவனை மன்னியுங்கள்.
4 ஒரே நாளில் உங்கள் சகோதரன் ஏழுமுறை உங்களிடம் தவறு செய்தும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் மன்னிப்பு வேண்டினான் என்றால், நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும் என்றார்.
5 சீஷர்கள் இயேசுவை நோக்கி, இன்னும் மிகுந்த விசுவாசத்தை எங்களுக்கு வழங்குங்கள் என்றார்கள்.
6 கர்த்தர், உங்கள் விசுவாசம் ஒரு கடுகளவு பெரியதாக இருந்தால் இந்த முசுக்கட்டை மரத்தைப் பார்த்து, ԅநீ தானாகவே பெயர்ந்து கடலில் விழு என்று கூறினால் அந்த மரமானது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
7 வயலில் வேலை செய்கிற ஊழியன் ஒருவன் உங்களில் ஒருவனுக்கு இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் நிலத்தை உழுது கொண்டோ, ஆடுகளை மேய்த்துக்கொண்டோ இருக்கிறான். அவன் வயலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் அவனிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? வந்து சாப்பிட உட்கார் என்பீர்களா?
8 இல்லை. நீங்கள் அந்த ஊழியனிடம், ԅநான் உண்பதற்கு ஏதேனும் தயார் செய். நான் சாப்பிட்டு முடிக்கும்வரை பரிமாறுவதற்கான ஆடைகளை அணிந்துகொள். பிறகு நீ சாப்பிடவும், பருகவும் செய்யலாம் என்பீர்கள்.
9 தன் வேலையைச் செய்வதற்காக அவனுக்கு விசேஷமாக நன்றி செலுத்த வேண்டியது இல்லை. அவனது எஜமானன் சொல்வதை மட்டும் அவன் செய்து கொண்டிருக்கிறான்.
10 அதுவே உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் செய்யும்படியாக கூறப்பட்ட காரியங்களை நீங்கள் செய்யும்போது நீங்கள், ԅஎந்த விசேஷ நன்றியறிதலுக்கும் நாங்கள் தகுதியுடையவர்கள் அல்ல. நாங்கள் செய்யவேண்டிய வேலையையே செய்து முடித்தோம் என்று சொல்ல வேண்டும் என்றார்.
11 இயேசு எருசலேமுக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். கலிலேயாவைக் கடந்து அவர் சமாரியாவுக்குப் போனார்.
12 அவர் ஒரு சிற்றூருக்கு வந்தார். பத்து மனிதர்கள் அவரை அங்கு சந்தித்தார்கள். அவர்கள் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களாதலால் அவர் அருகே வரவில்லை.
13 ஆனால் அம்மனிதர்கள் இயேசுவை நோக்கி, உரக்கக் கூவி, இயேசுவே! குருவே! தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்கள்.
14 அம்மனிதர்களைப் பார்த்தபோது இயேசு, போய் ஆசாரியர் முன்பு உங்களை நீங்களே காட்டுங்கள் என்றார். அந்தப் பத்து மனிதர்களும் ஆசாரியரிடம் போய்கொண்டிருக்கையில் அவர்கள் குணமடைந்தார்கள்.
15 அவர்களில் ஒருவன் தான் சுகம் பெற்றதைக் கண்டபோது இயேசுவிடம் திரும்பிச் சென்றான். அவன் உரத்த குரலில் தேவனுக்கு நன்றியைத் தெரிவித்தான்.
16 அவன் இயேசுவின் பாதங்களில் விழுந்தான். அந்த மனிதன் இயேசுவுக்கு நன்றி கூறினான். (இந்த மனிதன் ஒரு சமாரியன். யூதன் அல்லன்)
17 இயேசு, பத்து மனிதர்கள் நலமடைந்தனர். மற்ற ஒன்பது பேர் எங்கே?
18 தேவனுக்கு நன்றி சொல்லுவதற்குத் திரும்பி வந்தவன் இந்த சமாரியன் மட்டும் தானா? என்று கேட்டார்.
19 பின்பு இயேசு அவனை நோக்கி, எழுந்திரு, நீ போகலாம். நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய் என்றார்.
20 பரிசேயர்களில் சிலர் இயேசுவை நோக்கி, தேவனின் இராஜ்யம் எப்போது வரும்? என்று கேட்டார்கள். இயேசு பதிலாக, தேவனுடைய இராஜ்யம் வந்து கொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் கண்களால் பார்க்கும்படியான வகையில் அல்ல.
21 ԅபாருங்கள், தேவனுடைய இராஜ்யம் இங்கே இருக்கிறது அல்லது ԅஅங்கே இருக்கிறது என்று மக்கள் சொல்ல மாட்டார்கள். இல்லை, தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்றார்.
22 பின்பு இயேசு அவரது சீஷர்களை நோக்கி, மனித குமாரனின் நாட்களில் ஒன்றை நீங்கள் காண விரும்பும் காலம் வரும். ஆனால் உங்களால் அதைப் பார்க்க இயலாது.
23 மக்கள் உங்களிடம், ԅபாருங்கள், அது அங்கே இருக்கிறது அல்லது ԅபாருங்கள், இங்கே அது இருக்கிறது என்பார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் நிலைத்திருங்கள். எங்கேயும் தேடாதீர்கள் என்றார்.
24 மனித குமாரன் திரும்ப வருவார், என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் வரும் நாளில் வானில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு ஒளிவிடும் மின்னலைப் போல அவர் ஒளிவீசுவார்.
25 ஆனால் முதலில் மனித குமாரன் பல துன்பங்களைத் தாங்கி இந்தக் காலத்து மக்களால் தள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது.
26 நோவா வாழ்ந்த காலத்தைப்போலவே மீண்டும் மனித குமாரன் வரும் பொழுதும் நடக்கும்.
27 நோவாவின் காலத்தில் நோவா படகில் நுழைந்த தினத்தில் கூட மக்கள் உண்டு, பருகி, மணம் செய்து வாழ்ந்தார்கள். அப்பொழுது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எல்லா மக்களையும் கொன்றது.
28 தேவன், லோத்தின் காலத்தில் சோதோமை அழித்ததைப் போலவே அதுவும் இருக்கும். அந்த மக்கள் உண்டு பருகி, வாங்கி, விற்று, நட்டு, தங்களுக்காக வீடுகளைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள்.
29 லோத்து தனது ஊரை விட்டுப்போன நாளில் கூட மக்கள் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருந்தார்கள். வானத்தில் இருந்து அக்கினி வந்து அவர்கள் எல்லாரையும் கொன்றது.
30 மனித குமாரன் மீண்டும் வரும்போதும் இதே விதமாக நடக்கும்.
31 அந்த நாளில் ஒரு மனிதன் கூரையின் மீது இருந்தால், அவன் உள்ளேபோய் தனது பொருட்களை எடுத்துக் கொள்வதற்கு அவனுக்கு நேரம் இருக்காது. ஒரு மனிதன் வயலில் இருந்தால், அவன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது.
32 லோத்தின் மனைவிக்கு என்ன நேரிட்டது என்பதை நினைவுகூருங்கள்.
33 தன் உயிரைக் காப் பற்றிக்கொள்ள முயலும் ஒருவன் அதை இழந்து போவான். ஆனால் உயிரைக் கொடுக்கிறவனோ அதை மீட்டுக் கொள்வான்.
34 இரவில் ஒரே அறையில் இரண்டுபேர் உறங்கிக்கொண்டிருக்கக் கூடும். ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான். மற்றவன் விட்டு விடப்படுவான்.
35 இரு பெண்கள் ஒருமித்து தானியங்களை அரைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள். மற்றொருத்திவிட்டு விடப்படுவாள் என்றார்.
36 [This verse may not be a part of this translation]
37 சீஷர்கள் இயேசுவிடம், ஆண்டவரே, இது எங்கே நடக்கும்? என்று கேட்டார்கள். பதிலாக இயேசு, வட்டமிடுகிற கழுகுகளைப் பார்ப்பதின் மூலம் இறந்த சடலத்தை மக்கள் எப்போதும் கண்டுபிடிக்க முடியும் என்றார்.

Luke 17:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×