நீங்கள் என் தலைவன் எசாயூவிடம் போய், உம் தம்பி யாக்கோபு அனுப்பும் செய்தியாவது: நான் லாபானிடம் அகதியாகச் சஞ்சரித்து இந்நாள் வரையிலும் அவனிடம் தங்கியிருந்தேன்.
மாடுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் எனக்கு உண்டு. இப்போது உமது கண்களில் எனக்குத் தயவு கிடைக்கத் தக்கதாய், என் தலைவனான உமக்குத் தூது அனுப்பலானேன் எனச் சொல்லுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.
அவர்கள் (போய்) யாக்கோபிடம் திரும்பி வந்து: நாங்கள் உம் தமையனார் எசாயூவிடம் போனோம். அவர் இதோ நானூறு பேருடன் விரைந்து உம்மைச் சந்திக்க வருகிறார் என்றனர்.
மேலும் யாக்கோபு: என் தந்தை ஆபிரகாமின் கடவுளும் என் தந்தை ஈசாக்கின் கடவுளுமாயிருக்கிற ஆண்டவரே, நீர் என்னை நோக்கி: உன் சொந்த நாட்டிற்கும் உன் பிறந்த பூமிக்கும் திரும்பிப் போ; நாம் உன்னை ஆசீர்வதிப்போம் எனத் திருவாக்கருளினீரன்றோ?
அடியேனுக்கு நீர் செய்து வந்துள்ள எல்லாத் தயவுக்கும், நிறைவேற்றின சத்தியத்திற்கும் நான் தகுதியுள்ளவனல்லன். நான் கோலும் கையுமாய் (இந்த) யோர்தான் (நதியைக்) கடந்தேனே; இப்போதோ, இரண்டு பரிவாரங்களோடு திரும்பி வரலானேன்.
என் தமையனாகிய எசாயூவின் கையினின்று என்னைக் காத்தருளும். அவனுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன். ஒரு வேளை அவள் வந்து, பிள்ளைகளையும் தாயையும் அழிக்கக் கூடும்.
பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும் அவற்றின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும் இருபது காளைகளையும், இருபது கோவேறு கழுதைகளையும், பத்துக் கழுதைக் குட்டிகளையும் பிரித்தெடுத்து, ஊழியக்காரர் கையில்
பின் (யாக்கோபு) முந்திப் போகிறவனை நோக்கி: என் தமையனாகிய எசாயூ உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடைய ஆள்? அல்லது, நீ எங்கே போகிறாய்? அல்லது, நீ ஓட்டிப் போகிற மந்தை யாருடையது என்று அவன் உன்னைக் கேட்டால், நீ:
இவை உம் அடியானாகிய யாக்கோபினுடையவை. அவர், தம் தலைவனாகிய எசாயூக்கு இவற்றைக் காணிக்கையாக அனுப்பினார். அவரும் எங்கள் பின்னால் வருகிறார் என்று பதில் சொல்வாய் என்றான்.
அதேவிதமாய் யாக்கோபு இரண்டு மூன்று வேலைக்காரர்களையும், மந்தைகளை ஓட்டிப் போகிற மற்று முள்ளோர்களையும் நோக்கி: நீங்களும் எசாயூவைக் காணும் போது அவ்விதமாகவே அவரிடம் சொல்லுங்கள்.
மேலும்: இதோ உம் அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னால் வருகிறார். ஏனென்றால், அவர்: முன்னே வெகுமதிகளை அனுப்பித் தமையனாரைச் சமாதானப் படுத்திக் கொண்ட பின்பே அவருடைய முகத்தில் விழிப்பேன் என்றும், அப்பொழுது அவர் ஒருவேளை என்மேல் இரக்கமாய் இருப்பார் என்றும் நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பினான்.
பின் அவன் அதிகாலையிலே துயில் விட்டெழுந்து, தன் புதல்வர் பதினொருவரையும், இரு மனைவியரையும் இரண்டு வேலைக்காரிகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு, ஜாபோக் ஆற்றின் துறையைக் கடந்தான்.
அப்பொழுது அவர்: உன் பெயர் இனி யாக்கோபு இல்லை; இஸ்ராயேல் எனப்படும். ஏனென்றால், நீ கடவுளோடு போராடி மேற்கொண்டாயென்றால், மனிதர்களை மேற்கொள்வாயென்று சொல்லவும் வேண்டுமா என்றார்.
யாக்கோபு அவரை நோக்கி: உம் பெயர் என்ன? அடியேனுக்கு அறிவிக்க வேண்டும் என்று வினவ, அவர்; என் பெயரை நீ கேட்பதென்ன என்று பதில் சொல்லி, அந்த இடத்திலேயே அவனை ஆசீர்வதித்தார்.
அதன் பொருட்டு, இஸ்ராயேல் மக்கள் இந்நாள் வரை தொடைச் சந்து நரம்பை உண்பதில்லை. ஏனென்றால், (முன் சொல்லப்பட்ட ஆடவனால்) யாக்கோபின் நரம்பு தொடப்படவே, அது சூம்பிப் போயிற்று.