நீங்கள் எல்லாரும் பரவசப் பேச்சுத் தாராளமாய்ப் பேசலாம்; ஆனால், அதைவிட நீங்கள் இறைவாக்கு உரைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். பரவசப் பேச்சுப் பேசுகிறவன் திருச்சபை ஞான வளர்ச்சியடையும் படி விளக்கமும் கூறினாலொழிய அவனைவிட இறைவாக்குரைப்பவனே மேலானவன்.
சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து,. உங்களுக்குத் திருவெளிப்பாடு, ஞான அறிவு, இறைவாக்கு, போதனை இவற்றில் ஒன்றையேனும் எடுத்துச் சொல்லாமல் பரவசப்பேச்சு மட்டும் பேசினால், உங்களுக்குப் பயன் என்ன?
இல்லையேல், நீ ஆவியால் இறைபுகழ் கூறும்போது, சபையில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள் உனது நன்றிச் செபத்திற்கு எவ்வாறு ' ஆமென் ' எனச் சொல்லுவார்கள்? நீ பேசுவது அவர்களுக்குப் புரியவில்லையே!
ஆனாலும் நான் சபையிலே பேசினால் பரவசப் பேச்சில் பத்தாயிரம் சொற்கள் பேசுவதைவிட , மற்றவர்களுக்குக் கற்பிக்க அறிவுத் தெளிவோடு நாலைந்து சொல் மட்டுமே பேசுவதை விரும்புவேன்
' வேற்று மொழியினர் வாயிலாகவும் வேற்றினத்தார் வாய்ச்சொல்லாலும் இந்த மக்களிடம் பேசுவேன். அப்பொழுதும் அவர்கள் எனக்குச் செவி கொடுக்க மாட்டார்கள் என்கிறார் ஆண்டவர் ' என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.
அப்படியிருக்க, முழுச்சபையும் ஒன்றாகக் கூடும்பொழுது, எல்லாரும் பரவசப் பேச்சுப் பேசினால், அங்கே வரும் பொதுமக்களோ அவிசுவாசிகளோ உங்களைப் பைத்தியக்காரர் என்று சொல்ல மாட்டார்களா?
ஆனால் எல்லாரும் இறைவாக்கு உரைக்கும்போது, அவிசுவாசியோ, பொதுமக்களுள் ஒருவனோ அங்கே வந்தால், அனைவரும் கூறுவது, அவனுடைய மனச்சாட்சியின் நிலையை எடுத்துக்காட்டி, அவனைத் தீர்ப்புக்கு உட்படுத்துகிறது.
அவனது உள்ளத்தில் மறைந்திருப்பது வெளிப்படும். அப்பொழுது அவன் குப்புற விழுந்து, கடவுளைத் தொழுது, ' உண்மையாகவே கடவுள் உங்களிடையில் உள்ளார் ' என அறிக்கையிடுவான்.
அப்படியானால், சகோதரர்களே, என்ன முடிவு செய்வது? நீங்கள் கூடிவரும்பொழுது. உங்களுள் ஒருவன் புகழ் பாடுவதாகவோ, போதனை செய்வதாகவோ, திருவெளிப்பாடு உரைப்பதாகவோ, பரவசப் பேச்சுப் பேசுவதாகவோ, விளக்கம் கூறுவதாகவோ இருந்தால், எல்லாம் ஞானவளர்ச்சி தர நடை பெறட்டும்.
உங்களிடம் மட்டுமா வந்தது? ஒருவன் தான் இறைவாக்கினன் என்றோ, ஆவியின் ஏவுதல் பெற்றவன் என்றோ எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுவது ஆண்டவருடைய கட்டளை என அவன் ஒத்துக்கொள்வானாக.