1
|
பின்பு எலிகூ தொடர்ந்து பேசினான். அவன்: |
2
|
"நான் கூறுபவற்றை கேளுங்கள், ஞானிகளே, நான் சொல்வதைக் கவனியுங்கள், அறிஞர்களே. |
3
|
உங்கள் நாவு, அது தொடுகிற உணவைருசிக்கிறது. உங்களது காது, அது கேட்கிறவார்த்தைகளைச் சோதிக்கிறது. |
4
|
எனவே நாம் அந்த விவாதங்களைச் சோதிப்போம், எது சரியென நாமே முடிவு செய்வோம். எது நல்லதென நாம் ஒருமித்திருந்து கற்போம். |
5
|
யோபு, ‘யோபாகிய நான் களங்கமற்றவன், தேவன் என்னிடம் நியாயமுடையவராயிருக்கவில்லை. |
6
|
நான் களங்கமற்றவன், ஆனால் நீதி எனக்கொதிராக வழங்கப்பட்டது, அது நான் பொய்யனெனக் கூறுகிறது. நான் களங்கமற்றவன், ஆனால் மிக மோசமாகக் காயமுற்றேன்’ என்கிறான். |
7
|
"யோபைப்போல வேறெவனாகிலும் இருக்கிறானா? நீங்கள் அவமானப்படுத்தினால் யோபு அதைப் பொருட்படுத்துவதில்லை. |
8
|
யோபு தீயோரோடு நட்புடையவனாயிருந்தான். யோபு கெட்ட ஜனங்களோடிருக்க விரும்புகிறான். |
9
|
ஏன் நான் அவ்வாறு சொல்கிறேன்? ஏனெனில் யோபு, ‘ஒருவன் தேவனைத் தவறான வழிகளில் சந்தோஷப்படுத்த முயற்சி செய்தால் அதனால் அவனுக்கு நன்மையேதும் வாய்க்காது’ என்கிறான். |
10
|
"உங்களால் புரிந்துகொள்ள முடியும், எனவே நான் சொல்வதைக் கேளுங்கள். தேவன் தீயவற்றை ஒருபோதும் செய்யமாட்டார்! சர்வ வல்லமையுள்ள தேவன் தவறிழைக்கமாட்டார்! |
11
|
ஒருவன் செய்யும் காரியங்களுக் கேற்றபடியே தேவன் பலனளிப்பார். ஒருவனுக்கு உரியதை தேவன் அவனுக்குக் கொடுக்கிறார். |
12
|
இதுவே உண்மை, தேவன் தவறிழைக்கமாட்டார், சர்வ வல்லமையுள்ள தேவன் எப்போதும் நியாயந்தீர்ப்பார். |
13
|
பூமிக்குப் பொறுப்பாக இருக்கும்படி தேவனை எந்த மனிதனும் தேர்ந்தெடுக்கவில்லை, உலகம் முழுவதற்கும் பொறுப்பை தேவனுக்கு ஒருவனும் கொடுக்கவில்லை. தேவன் எல்லாவற்றையும் படைத்தார். எல்லாம் அவரது ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றன. |
14
|
தேவன் மனிதனது ஆவியை எடுக்க முடிவெடுத்தால், அவனது மூச்சை நீக்கிவிட முடிவெடுத்தால், |
15
|
அப்போது பூமியின் ஜனங்கள் எல்லோரும் மரிப்பார்கள். எல்லா ஜனங்களும் மீண்டும் மண்ணாவார்கள். |
16
|
"நீங்கள் ஞானிகளாயிருந்தால், நான் சொல்வதற்குச் செவிகொடுப்பீர்கள். |
17
|
ஒருவன் நியாயஞ்செய்வதை வெறுத்தால், அவன் அரசனாக இருக்கமுடியாது. யோபுவே, தேவன் வல்லவரும் நல்லவருமானவர். அவரைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா? |
18
|
தேவனே அரசர்களிடம், ‘நீங்கள் தகுதியற்றவர்கள்’ என்கிறார். தேவனே தலைவர்களிடம் ‘நீங்கள் தீயவர்கள்’ என்கிறார்! |
19
|
தேவன் ஜனங்களைக் காட்டிலும் தலைவர்களை நேசிப்பதில்லை. தேவன் ஏழைகளைக் காட்டிலும் செல்வந்தரை நேசிப்பதில்லை. ஏனெனில், தேவனே ஒவ்வொருவரையும் உண்டாக்கினார். |
20
|
ஜனங்கள் நள்ளிரவில் திடீரென மரிக்க முடியும். ஜனங்கள் நோயுற்று மடிவார்கள். தெளிவான காரணமின்றி வலிமையான ஜனங்களும்கூட மரிப்பார்கள். |
21
|
"ஜனங்கள் செய்வதை தேவன் கண்ணோக்குகிறார். ஒருவன் வைக்கிற ஒவ்வோர் அடியையும் தேவன் அறிகிறார். |
22
|
தேவனிடமிருந்து ஒளிப்பதற்கேற்ற இருள் நிரம்பிய இடம் எதுவும் தீயோருக்குக் கிடைப்பதில்லை. |
23
|
ஜனங்களைச் சோதித்துப் பார்க்கும் நேரத்தை தேவன் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. தேவன், நியாயந்தீர்ப்பதற்குத் தனக்கு முன்னிலையில் ஜனங்களைக் கொண்டுவர தேவையில்லை. |
24
|
வல்லமையுள்ள ஜனங்கள் தீய காரியங்களைச் செய்யும்போது, தேவன் கேள்விகளைக் கேட்கத் தேவையில்லை. தேவன் அந்த ஜனங்களை அழித்துவிடுவார், வேறு ஜனங்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுப்பார். |
25
|
எனவே ஜனங்கள் செய்வது என்ன என்பதை தேவன் அறிகிறார். அதனால் விரைவில் தேவன் தீயோரைத் தோற்கடித்து அவர்களை ஒரே இரவில் அழித்துவிடுவார். |
26
|
கெட்ட ஜனங்கள் செய்த தீய காரியங்களுக்காக, தேவன் அவர்களைத் தண்டிப்பார். பிற ஜனங்கள் காணும்படியாக அந்த ஜனங்களை தேவன் தண்டிப்பார். |
27
|
ஏனெனில், கெட்ட ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள். தேவன் விரும்புகிறபடியே செய்வதற்கும் அந்த ஜனங்கள் கவலைப்படுவதில்லை. |
28
|
அந்தக் கெட்ட ஜனங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறார்கள். தேவனை நோக்கி அவர்கள் உதவி வேண்டி அழும்படிச் செய்கிறார்கள். ஏழைகள் உதவி கேட்டு அழுவதை தேவன் கேட்கிறார். |
29
|
ஆனால் ஏழைகளுக்கு உதவ வேண்டாமென்று தேவன் முடிவுச் செய்தால், ஒரு வரும் தேவனைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியாது. தேவன் ஜனங்களிடமிருந்து தன்னை மறைத்து கொண்டாரானால் அப்போது அவரை ஒருவரும் பார்க்க முடியாது. தேவனே ஜனங்களுக்கும் தேசங்களுக்கும் அரசர். |
30
|
"ஒரு அரசன் தீயவனாக இருந்து பிறர் பாவம் செய்யும்படி பண்ணினால், அப்போது, தேவன் அவனை அரசாளும்படி அனுமதிக்கமாட்டார். |
31
|
"ஒரு மனிதன் தேவனிடம், ‘நான் குற்றவாளி, இனிமேல் பாவம் செய்யமாட்டேன். |
32
|
தேவனே, நான் உம்மைப் பார்க்க முடியாவிட்டாலும் தக்க நெறியில் வாழும் வகையைத் தயவு செய்து எனக்குப் போதியும். நான் தவறு செய்திருந்தால், மீண்டும் அதைச் செய்யமாட்டேன்’ என்று கூறலாம். |
33
|
"யோபுவே, தேவன் உனக்குப் பரிசளிக்க (பலன்தர) வேண்டுமென நீ விரும்புகிறாய். ஆனால் நீயோ உன்னை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய். யோபுவே, இது உம் முடிவு, என்னுடையதல்ல, நீ நினைப்பதை எனக்குச் சொல்லு. |
34
|
"ஒரு ஞானி நான் சொல்வதைக் கேட்பான். ஒரு ஞானி, |
35
|
"யோபு அறியாமையுடையவனைப் போலப் பேசுகிறான். யோபு சொல்கின்றவை பொருள்தருவன அல்ல,’ என்பான். |
36
|
யோபு இன்னும் அதிகமாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஏனெனில் ஒரு தீயவன் பதில் சொல்கிறாற்போல, யோபுவும் எங்களுக்குப் பதில் சொல்கிறான். |
37
|
யோபு தனது பிற பாவங்களோடு இன்னும் பாவங்களை அதிகமாக்கினான். எங்களுக்கு முன்பாக யோபு அமர்ந்திருக்கிறான், அவன் எங்களை அவமானப்படுத்துகிறான், தேவனைக் கேலிச்செய்கிறான்!" என்றான். |
Job 34:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...