2
|
"ஆம் நீர் கூறுவது உண்மையென அறிவேன். ஆனால் ஒரு மனிதன் எப்படி தேவனுக்கு முன் நீதிமானாயிருக்க முடியும்? |
3
|
ஒருவன் தேவனிடம் வாதாட முடியாது! தேவன் 1,000 கேள்விகளைக் கேட்கமுடியும், ஒருவனும் ஒரு கேள்விக்குக்கூட பதில் கூற முடியாது! |
4
|
தேவன் மிகுந்த ஞானமுள்ளவர், அவரது வல்லமை மிகப்பெரியது! ஒருவனும் தேவனோடு போராடி, காயமுறாமலிருக்க முடியாது. |
5
|
தேவன் கோபமாயிருக்கும்போது பர்வதங்களை அசைக்கிறார், அவை அதனை அறியாது. |
6
|
பூமியை அசைக்கும்படி தேவன் பூமியதிர்ச்சியை அனுப்புகிறார். தேவன் பூமியின் அஸ்திபாரங்களை அசைக்கிறார். |
7
|
தேவன் சூரியனிடம் பேசமுடியும், அதை உதயமாகாமல் செய்யமுடியும். அவர் விண்மீன்களை ஒளிவிடாதபடி பூட்டமுடியும். |
8
|
தேவன் மட்டுமே வானங்களை உண்டாக்கினார், அவர் சமுத்திரத்தின் அலைகளின் மேல் நடக்கிறார். |
9
|
[This verse may not be a part of this translation] |
10
|
மனிதர் புரிந்துகொள்ள முடியாத அற்புதமான காரியங்களை தேவன் செய்கிறார். தேவனுடைய எண்ணிமுடியாத அதிசங்களுக்கு முடிவேயில்லை! |
11
|
தேவன் என்னைக் கடந்துச் செல்கையில் நான் அவரைப் பார்க்க முடியாது. தேவன் என்னைக் கடந்துச் செல்கையில் நான் அவரைக் கவனிப்பதில்லை. |
12
|
தேவன் எதையாவது எடுத்துக்கொண்டால் அவரை யாரும் தடுக்க முடியாது. ‘நீர் என்ன செய்கிறீர்?’ என்று யாரும் அவரைக் கேட்கமுடியாது. |
13
|
தேவன் தமது கோபத்தை அடக்கிக்கொள்ளமாட்டார். ராகாபின் உதவியாளருங்கூட தேவனுக்குப் பயந்திருக்கிறார்கள். |
14
|
எனவே நான் தேவனுக்கு பதில் கொடுக்க முடியாது. அவரிடம் என்ன சொல்வேனென்பதை நான் அறியேன். |
15
|
நான் களங்கமற்றவன், ஆனால் என்னால் அவருக்குப் பதில் கூறமுடியாது. என் நீதிபதியிடம் (தேவனிடம்) இரக்கத்திற்காக மன்றாடமட்டுமே என்னாலாகும். |
16
|
நான் கூப்பிட்டு அவர் பதில் தந்தாலும், அவர் உண்மையாகவே எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நான் நம்ப முடியாது. |
17
|
தேவன் என்னை நசுக்குவதற்குப் புயல்களை அனுப்புகிறார். எக்காரணமுமின்றி எனக்கு இன்னு மதிகமான காயங்களைத் தருகிறார். |
18
|
மீண்டும் இன்னொரு முறை சுவாசிக்க தேவன் என்னை அனுமதிக்கமாட்டார். அவர் எனக்கு இன்னும் தெல்லைகளைத் தருகிறார். |
19
|
தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர்! யார் தேவனை நியாயசபைக்கு அழைத்து வந்து, நியாயம் வழங்கும்படி சொல்ல முடியும்? |
20
|
நான் களங்கமற்றவன், ஆனால் நான் கூறுபவை என்னைக் குற்றவாளியாகக் காட்டக்கூடும். நான் உத்தமன், ஆனால் நான் பேசினால் என் வாய் என்னைக் குற்றவாளியாக நிரூபிக்கிறது. |
21
|
நான் களங்க மற்றவன், நான் எதைச் சிந்திப்பதென அறியேன். நான் என் சொந்த வாழ்க்கையையே வெறுக்கிறேன். |
22
|
நான் எனக்குள்ளே, ‘இதே மாதிரி எல்லோருக்கும் நிகழ்கிறது’ களங்கமற்றவர்களும் குற்றவாளிகளும் முடிவை காண்பார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன். |
23
|
கொடிய செயலொன்று நிகழ்ந்து களங்கமற்றவன் கொல்லப்பட்டால் தேவன் அவரைப் பார்த்து நகைப்பாரா? |
24
|
தீயவன் ஒருவன் ஒரு நிலத்தைத் தன தாக்கிக்கொள்ளும்போது, நிகழ்வனவற்றைத் தலைவர்கள் காணாதபடி தேவன் செய்கிறாரா? அது உண்மையானால் தேவன் யார்? |
25
|
"ஓர் ஓட்டக்காரனைக் காட்டிலும் என் நாட்கள் வேகமாகக் கழிகின்றன. என் நாட்கள் பறக்கின்றன, அவற்றில் சந்தோஷமில்லை. |
26
|
வேகமாய் ஓடுகின்ற கப்பல்களைப் போலவும் இரையைப் பிடிக்க பாய்கின்ற கழுகுகளைப் போலவும் என் நாட்கள் கடந்துச்செல்கின்றன. |
27
|
‘நான் முறையிடுவதில்லை, என் வேதனையை மறப்பேன், என் முகத்தில் புன்னகை பொலிவேன்!’ என்று நான் கூறினால், |
28
|
அது எந்த மாற்றத்தையும் உண்மையாக ஏற்படுத்துவதில்லை! துன்பங்கள் என்னை அச்சுறுத்துகின்றன. |
29
|
நான் ஏற்கெனவே குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டேன். எனவே, நான் ஏன் முயன்றுகொண்டிருக்க வேண்டும்? ‘அதை மறந்துவிடு!’ என நான் சொல்கிறேன். |
30
|
பனியால் என்னைக் கழுவினாலும், சவுக்காரத்தினால் (சோப்பினால்) என் கைகளைச் சுத்தம் செய்தாலும், |
31
|
தேவன் என்னைச் சேற்றுக் குழியில் தள்ளுவார். அப்போது என் உடைகளும் என்னை வெறுக்கும். |
32
|
தேவன் கூறும் குற்றங்களுக்கு பதில் கூற என்னைப் போன்று மனிதன் அல்ல, நியாய சபையில் நாங்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாது. |
33
|
இரு பக்கங்களிலும் நியாயம் கேட்க ஒருவர் இருந்தால், நல்லதென நான் விரும்புகிறேன். எங்களை நியாயமாக (தக்க முறையில்) நியாயந்தீர்க்க வல்லவர் ஒருவர் இருக்கமாட்டாரா என நான் விரும்புகிறேன். |
34
|
தேவனுடைய தண்டிக்கும் கோலை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடுபவர் ஒருவர் இருக்கமாட்டாரா என விரும்புகிறேன். அப்போது அவருடைய பயமுறுத்துதல்கள் என்னை அச்சுறுத்தாது. |
35
|
அப்போது தேவனைப்பற்றிப் பயப்படாமல், நான் சொல்ல விரும்புவனவற்றைக் கூற முடியும். ஆனால் இப்போது நான் அவ்வாறு செய்ய முடியாது" என்றான். |
Job 9:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...