1
|
"என்னைக் கவர்கின்ற ஒரு கன்னிப் பெண்ணைப் பாராதிருக்கும்படி என் கண்களோடு நான் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டேன். |
2
|
சர்வ வல்லமையுள்ள தேவன் ஜனங்களுக்கு என்ன செய்கிறார்? உயரத்திலுள்ள பரலோகத்தின் வீட்டிலிருந்து எவ்வாறு தேவன் ஜனங்களுக்குத் திரும்பக் கொடுக்கிறார்?Ԕ |
3
|
தேவன் தொல்லையையும் அழிவையும் கெட்ட ஜனங்களுக்கு அனுப்புகிறார். தவறு செய்வோர்க்கு அழிவை அனுப்புகிறார். தவறு செய்வோர்க்கு அழிவை அனுப்புகிறார். |
4
|
நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் அறிகிறார். நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் தேவன் காண்கிறார். |
5
|
"நான் பொய்களாலான வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அல்லது நான் பொய் சொல்லவும் ஜனங்களை ஏமாற்றவும் ஓடியிருந்தால், |
6
|
அப்போது, தேவன் என்னைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குத் தக்க அளவு கோலைப் பயன்படுத்தட்டும். அப்போது நான் களங்கமற்றவன் என்பதை தேவன் அறிவார்! |
7
|
நான் சரியான பாதைக்குப் புறம்பே நடந்தால், என் கண்கள் என் இருதயத்தை தீமைக்கு நேரே நடத்தினால், என் கைகளில் பாவத்தின் அழுக்குப் படிந்திருந்தால், அப்போது தேவன் அறிவார், |
8
|
அப்போது நான் நட்ட பயிர்களைப் பிறர் உண்ணட்டும், என் பயிர்கள் பிடுங்கப்படட்டும். |
9
|
"நான் பெண்களிடம் காம இச்சை (மோகம்) கொண்டிருந்தால். அயலானின் மனைவியோடு தகாத நெறியில் நடக்கும்படி அவன் கதவருகே காத்திருந்தால். |
10
|
அப்போது, எனது மனைவி மற்றொருவனின் உணவைச் சமைக்கட்டும், பிற மனிதன் அவளோடு படுத்திருக்கட்டும். |
11
|
ஏனெனில் உடலுறவால் விளையும் பாவம் அவமானத்திற்குரியது. அது தண்டனை பெறக்கூடியக் பாவமாகும். |
12
|
பாலின உறவு சம்மந்தமான பாவம் அனைத்தையும் அழிக்கும்வரை எரியும் நெருப்பைப் போன்றது. நான் இதுவரைச் செய்த அனைத்தையும், எனது உடமைகள் யாவற்றையும் அது அழித்துவிடும்! |
13
|
"என் அடிமைகளுக்கு என்னிடம் ஏதோ குறைபாடு ஏற்பட்டபோது அவர்களிடம் நியாயமாயிருக்க நான் மறுத்திருந்தால், |
14
|
நான் தேவனைச் சந்திக்கும்போது என்ன செய்வேன்? நான் செய்ததைக் குறித்து தேவன் விளக்கம் கேட்டால் நான் என்ன சொல்வேன்? |
15
|
என் தாயின் கர்ப்பத்தில் தேவன் என்னை உண்டாக்கினார், தேவன் என் அடிமைகளையும் உண்டாக்கினார், நம்முடைய தாயின் கருவில் தேவன் நமக்கு உருவம் கொடுத்தார். |
16
|
"நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை. விதவைகளுக்குத் தேவையானவற்றை நான் எப்போதும் கொடுத்தேன். |
17
|
நான் உணவைப் பொறுத்தமட்டில் சுய நலம் பாராட்டியதில்லை. நான் எப்போதும் அநாதைகளுக்கு உணவளித்தேன். |
18
|
தந்தையற்ற பிள்ளைகளுக்கு என் வாழ்க்கை முழுவதும், நான் ஒரு தந்தையைப் போன்றிருந்தேன். என் வாழ்க்கை முழுவதும், நான் விதவைகளை ஆதரித்து வந்திருக்கிறேன். |
19
|
ஆடையில்லாததால் ஜனங்கள் துன்புறுவதைக் கண்டபோதும், மேற்சட்டையில்லாத ஏழையைக் கண்டபோதும், |
20
|
நான் அவர்களுக்கு எப்போதும் ஆடைகளைக் கொடுத்தேன். என் ஆடுகளின் மயிரைப் பயன்படுத்தி, அவர்கள் குளிர் நீங்கச் செய்தேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு என்னை ஆசீர்வதித்தார்கள். |
21
|
வாயிலில் ஒரு அநாதை வந்து உதவி வேண்டி நிற்கும்போது நான் என் கைமுட்டியை ஒருபோதும் ஆட்டியதில்லை. |
22
|
நான் எப்போதேனும் அப்படிச் செய்திருந்தால், அப்போது என் கரம் தோளிலிருந்து விழுந்திருக்கும் என நான் நம்புகிறேன்! நான் எப்போதேனும் அப்படிச் செய்திருந்தால், என் கரம் எலும்புக் குழியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்! |
23
|
ஆனால் நான் அத்தகைய தீயகாரியங்கள் எதையும் செய்யவில்லை. நான் தேவனுடைய தண்டனைக்கு அஞ்சியிருக்கிறேன். அவரது மகத்துவம் என்னை அச்சுறுத்துகிறது. |
24
|
"நான் என் செல்வங்களில் நம்பிக்கை வைத்ததில்லை. எனக்கு உதவுவதற்காக நான் எப்போதும் தேவனையே நம்பியிருந்தேன். தூய பொன்னிடம், ‘நீயே என் நம்பிக்கை’ என்று நான் கூறியதில்லை, |
25
|
நான் செல்வந்தனாக இருந்தேன். ஆனால் அது என்னைப் பெருமைக்காரனாக்கவில்லை! நான் மிகுதியான பொருளைச் சம்பாதித்தேன். ஆனால், என்னைச் சந்தோஷப்படுத்தியது அதுவல்ல! |
26
|
நான் ஒளிவிடும் சூரியனையோ, அழகிய சந்திரனையோ ஒருபோதும் தொழுதுகொண்டதில்லை. |
27
|
சூரியன் அல்லது சந்திரனை தொழுதுகொள்ளுமளவிற்கு நான் ஒருபோதும் மூடனாக இருந்ததில்லை. |
28
|
அதுவும் தண்டிக்கப்படவேண்டிய பாவம் ஆகும். நான் அப்பொருள்களை தொழுதுகொண்டிருந்திருப்பேனாகில் சர்வ வல்லமையுள்ள தேவனிடம் உண்மையற்றவனாவேன். |
29
|
"என் பகைவர்கள் அழிந்தபோது நான் மகிழ்ச்சியடைந்ததில்லை. தீயவை என் பகைவர்களுக்கு நேரிட்டபோது, நான் அவர்களைக் கண்டு நகைத்ததில்லை. |
30
|
என் பகைவர்களை சபிப்பதாலோ, அவர்கள் மரிக்க வேண்டும் என விரும்பியோ என் வாய் பாவம் செய்ய நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை. |
31
|
நான் அந்நியருக்கு எப்போதும் உணவளித்தேன் என்பதை என் வீட்டிலுள்ளோர் எல்லோரும் அறிவார்கள். |
32
|
அந்நியர்கள் இரவில் தெருக்களில் தூங்காதபடி நான் எப்போதும் அவர்களை வீட்டினுள்ளே வரவேற்றேன். |
33
|
பிறர் தங்கள் பாவங்களை மறைக்க முயல்கிறார்கள். ஆனால் நான் என் குற்றத்தை மறைத்ததில்லை. |
34
|
ஜனங்கள் என்ன சொல்வார்களோ? என்று நான் அஞ்சியதில்லை. அந்த அச்சம் என்னை அமைதியாயிருக்கச் செய்ததில்லை. நான் வெளியே போகாமலிருக்க அது தடையாயிருக்கவில்லை. என்னை ஜனங்கள் வெறுப்பதற்கு (ஜனங்களின் வெறுப்புக்கு) நான் அஞ்சவில்லை. |
35
|
"ஓ! யாரேனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்! நான் எனது நியாயத்தை விளக்கட்டும். சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குப் பதில் தருவார் என விரும்புகிறேன். நான் செய்தவற்றில் தவறென அவர் நினைப்பதை அவர் எழுதிவைக்கட்டும் என்று நான் விரும்புகிறேன். |
36
|
அப்போது என் கழுத்தைச் சுற்றிலும் அந்த அடையாளத்தை அணிந்துகொள்வேன். ஒரு கிரீடத்தைப்போன்று அதை என் தலைமேல் வைப்பேன். |
37
|
தேவன் அதைச் செய்தால். நான் செய்த ஒவ்வொன்றையும் விளக்கிக் கூற முடியும். தலை நிமிர்ந்தபடியே ஒரு தலைவனைப்போன்று நான் தேவனிடம் வர முடியும். |
38
|
"மற்றொருவனிடமிருந்து நான் என் நிலத்தைத் (அபகரிக்கவில்லை) திருடவில்லை. நிலத்தை திருடியதாக ஒருவனும் என் மீது குற்றம் சாட்ட முடியாது. |
39
|
நிலத்திலிருந்து நான் பெற்ற உணவிற்காக எப்போதும் உழவர்களுக்கு ஊதியம் கொடுத்துள்ளேன். ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்ற நான் ஒருபோதும் முயன்றதில்லை. |
40
|
நான் அத்தீயக்காரியங்களை எப்போதேனும் செய்திருந்தால் அப்போது என் வயல்களில் கோதுமை, பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாக முள்ளும் களைகளும் முளைக்கட்டும்!" என்றான். யோபின் வார்த்தைகள் (சொற்கள்) முடிவடைந்தன. |
Job 31:6 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...