Indian Language Bible Word Collections
Psalms 48:4
Psalms Chapters
Psalms 48 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 48 Verses
1
ஆண்டவர் மகத்துவமிக்கவர்: நம் இறைவனின் நகரில் மிகுந்த புகழ்ச்சிக்குரியவர்.
2
அவர் தம் மலை புனிதமானது, புகழ்மிக்கது, உலகனைத்திற்கும் மகிழ்ச்சியாய் விளங்குவது சீயோன் மலை வட கோடியில் உள்ளது; பேரரசரின் நகரம் அதுவே.
3
அதன் கொத்தளங்களில் கடவுள் உறைகின்றார்: அசைக்க முடியாத பாதுகாப்பாய் விளங்குகின்றார்.
4
இதோ! அரசர் அனைவரும் கூடினர்: ஒன்றுபடத் தாக்கினர்.
5
பார்த்தவுடனே திகைத்துப் போயினர்: கலக்கமுற்றனர், ஓட்டம் பிடித்தனர்.
6
அங்கேயே அச்சம் அவர்களை ஆட்கொண்டது: பேறுகால வேதனை போல் அவர்களுக்குத் துன்பம் உண்டாயிற்று.
7
தார்சிஸ் நாட்டுக்குச் செல்லும் கப்பல்களைக் கீழ்த்திசைக் காற்று தாக்கும் போது உண்டாகும் அச்சத்தைப் போன்றது அது.
8
நாங்கள் கேள்வியுற்றது போலவே இருக்கக் கண்டோம், வான் படைகளுக்கு ஆண்டவராயுள்ளவரது நகரில் நிகழக்கண்டோம்: நம் இறைவனின் நகரில் கண்டோம், கடவுள் அதை என்றென்றைக்கும் நிலை நிறுத்துகிறார்.
9
இறைவா, உம் இரக்கத்தைத் தியானித்தோம்: உம் ஆலயத்தில் அதைச் சிந்தனை செய்தோம்.
10
இறைவா, உமது பெயரைப்போலவே உமது புகழும் பூமியின் கடையெல்லை வரை எட்டுகின்றது; உமது வலக்கரம் நீதியால் நிரம்பியுள்ளது.
11
சீயோன் மலை அகமகிழ்வதாக: உமது நீதித் தீர்ப்புகளை நினைத்து யூதாவின் நகரங்கள் களி கூர்வதாக.
12
சீயோனைச் சுற்றிச் செல்லுங்கள்; அதனைச் சுற்றிப் பாருங்கள்: அதன் கொத்தளங்களை எண்ணிப் பாருங்கள்.
13
அதன் மதில் அரண்களை உற்றுப் பாருங்கள்; அதன் கோட்டைகளை ஆய்ந்து பாருங்கள்: அப்போது இனி வரும் தலைமுறையை நேக்கிச் சொல்வீர்கள்:
14
கடவுள் எவ்வளவு மேலானவர்! என்றென்றும் முடிவில்லாக் காலத்துக்கும் அவரே நம் கடவுள்: அவரே நம்மை வழி நடத்துவார்' என்பீர்கள்.