கடவுள் இல்லை' என்று அறிவிலி தனக்குள் சொல்லிக் கொள்கிறான்; மனிதர் முற்றிலும் கெட்டுப் போயினர்: அக்கிரமத்தையே செய்கின்றனர்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை.
தீமை செய்கிறவர்கள் எல்லாரும் உணவை விழுங்குவது போல் என் மக்களை விழுங்கப் பார்க்கிறார்கள்: இவர்கள் ஆண்டவரது உதவியை நாடுவதில்லை; இவர்கள் நல்லறிவு பெறமட்டார்களா?
சீயோனிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு மீட்பு வராதோ! ஆண்டவர் தம் மக்களுக்கு நல்ல வாழ்வு அளிக்கும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வர், இஸ்ராயேல் மக்கள் அகமகிழ்வர்.