(3) என் வேதனையின் போது என் ஆண்டவரிடம் கூக்குரலிட்டேன், அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்; பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூவினேன், நீர் என் குரலைக் கேட்டருளினீர்.
(7) மலைகளின் அடிவாரம் செல்லும் ஆழம் வரை, நிலத்தின் அடிக்குள் நான் இறங்கி விட்டேன், பாதாளத்தின் தாழ்ப்பாள் என்றென்றைக்கும் என்னை அடைத்தது; ஆயினும் என் கடவுளாகிய ஆண்டவரே, பாதாளப் படுகுழியிலிருந்து நீர் என்னுயிரை மீட்டு வந்தீர்.
யாக்கோபே! நான் உங்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டுவேன்; இஸ்ரயேலில் எஞ்சியோரை ஒன்றாகத் திரட்டுவேன்; இரைச்சலிடும் அந்தக் கூட்டத்தை ஆடுகளைக் கிடையில் மடக்குவது போலவும்; மந்தையை மேய்ச்சல் நிலத்தில் வளைப்பது போலவும் ஒன்றாகச் சேர்ப்பேன்.
அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்; அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வார்; ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்."