பின் ஆண்டவர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பெட்டகத்தினுள் செல்லுங்கள். ஏனென்றால், இப்பொழுது இருக்கிற மனிதர்களுக்குள்ளே உன்னையே நமது முன்னிலையில் நீதிமானென்று கண்டோம்.
ஏனென்றால், இன்னும் ஏழு நாட்களுக்குப் பின் நாற்பது பகலும் நாற்பது இரவுமாகப் பூமியின் மேல் நாம் மழை பொழியச் செய்து, படைக்கப்பட்ட உயிரினங்கள் எல்லாவற்றையும் பூமியின் கண் அழித்து விடுவோம் என்றார்.
நோவாவுக்கு அறுநூறு வயது நடக்கும் பொழுது, அவ்வாண்டின் இரண்டாம் மாதம் பதினேழாம் நாளன்று பெரும் பாதாளத்தின் ஊற்றுக் கண்கள் அனைத்தும் உடைபட்டன; வானத்தின் மதகுகளும் திறக்கப்பட்டன.
(முன் குறிப்பிட்ட) அந்த (ஏழாம்) நாளிலே நோவா தம் புதல்வராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களோடும், தம் மனைவியோடும், தம் புதல்வர்களின் மூன்று மனைவியரோடும் பெட்டகத்துள் சென்றார்.
கடவுள் அவருக்குக் கட்டளையிட்ட வண்ணமே ஆணும் பெண்ணுமாக எல்லா உயிரினங்களும் உள்ளே புகுந்தன. பின் ஆண்டவர் வெளிப்புறமிருந்து அவனுக்குப் பின்னாலே கதவை அடைத்தார்.
பூமியின் மீது நடமாடின உயிரினங்களான எல்லாப் பறவைகளும், வீட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும், பூமியின் மேல் ஊர்வன யாவும், எல்லா மனிதர்களும் அழிந்து போயினர்.
அவ்வாறு கடவுள் மனிதன் முதல் உயிர்ப் பிராணிகள் வரை, ஊர்வன முதல் வானத்துப் பறவைகள் வரை பூமியில் வாழ்ந்து வந்த உயிர்கள் அனைத்தையும் அழித்து விட்டார். அவையெல்லாம் பூமியிலிருந்து மறைந்து போயின. நோவாவும் அவருடன் பெட்டகத்திலிருந்தவர்களுமே அப்போது தப்பிப் பிழைத்தார்கள்.