நீ அதிகம் அன்பு செய்யும் உன் ஒரே புதல்வனான ஈசாக்கைத் தரிசனைப் பூமிக்குக் கூட்டிக் கொண்டு போய், அங்கே நாம் உனக்குக் காட்டும் ஒரு மலையின் மீது அவனைத் தகனப்பலியாக ஒப்புக் கொடுப்பாய் என்று மொழிந்தருளினார்.
அவ்வாறே ஆபிரகாம் இரவில் எழுந்து தமது கழுதைக்குச் சேணம் போட்டு, தம்மோடு இரண்டு ஊழியரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு போய்த்தகனப் பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டின பின் கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தைக் நோக்கிப் பயணமானார்.
நீங்கள் கழுதையைப் பார்த்துக் கொண்டு இங்கே காத்திருங்கள். நானும் என் மகனும் அவ்விடம் விரைந்து சென்று (ஆண்டவரை) ஆராதித்த பின் உங்களிடம் திரும்பி வருவோம் என்றார்.
பின் தகனப் பலிக்கு வேண்டிய கட்டைகளை எடுத்து, தம் மகன் ஈசாக்கின் (தோளின்) மீது சுமத்தினார்; நெருப்பையும் வாளையும் கையில் எடுத்தக் கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து செல்கையில்,
ஈசாக் தன் தந்தையை நோக்கி, அப்பா! என, அவர்: ஏன் மகனே! என்று கேட்டார். அதற்கு: இதோ நெருப்பும் கட்டைகளும் இருக்கின்றன. தகனப் பலிக்கு வேண்டிய மிருகம் எங்கே என்று வினவினான்.
கடவுடள் ஆபிரகாமுக்குக் காண்பித்திருந்த இடத்தை அவர்கள் அடைந்ததும், அவர் அங்கே ஒரு பீடம் அமைத்து அதன்மேல் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டிப் பீடத்தில் அடுக்கியிருந்த விறகுக் கட்டைகளின் மேல் அவனைக் கிடத்தி,
அவர்: உன் பிள்ளையின் மேல் கையோங்கி அவனுக்கு ஒன்றும் செய்யாதே. நீ தெய்வ பயமுடையவனாய், நம்பொருட்டு உன் ஒரே மகனையும் பலியிடத் தயங்கவில்லை என்று நாம் இப்போது அறிந்து கொண்டோம் என்றார்.
அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை ஏறெடுத்துத் திரும்பிப் பார்க்கையில், முட்செடியிலே கொம்பு மாட்டிக் கொண்டு நின்ற ஓர் ஆட்டுக் கிடாயைக் கண்டார்; அதைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக அதைத் தகனப் பலியாய் ஒப்புக் கொடுத்தார்.
ஆண்டவர் சொல்லுகிறதாவது: நம் பெயரைச் சொல்லி நாம் ஆணையிட்டு வாக்குறுதி செய்வது ஏதெனில், நீ அச்செயலைச் செய்ததனாலும், நம்மைப் பற்றி நீ உன் ஒரே மகனையும் பலியிட மனம் துணிந்ததனாலும்,
நாம் உன்னை ஆசீர்வதித்து, விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைக் போலவும் உன் இனம் பெருகச் செய்வோம். உன் இனம் தன் பகைவர்களின் வாயில்களை உரிமையாக்கிக் கொள்ளும்.