பின்பு கடவுள் மம்பிறே பள்ளத்தாக்கில் ஆபிரகாமுக்குத் தோன்றினார். அந்நேரம் வெப்பம் மிகுந்த உச்சிப் பகல் வேளையானதனால், அவர் கூடார வாயிலில் உட்கார்ந்திருந்தார்.
திடீரென்று அவர் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடனே அவர் கூடார வாயிலை விட்டு அவர்களுக்கு எதிர்கொண்டோடிக் குப்புற விழுந்து வணங்கி:
அதற்குள் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன். நீங்கள் உள்ளத்தைச் சற்றே திடப்படுத்திக் கொண்டபின் அப்பால் செல்வீர்களாக. இதற்காகத்தானே அடியேனிடத்திற்கு எழுந்தருளி வந்தீர்கள் என்றார். அவர்கள்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொன்னார்கள்.
அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாறாளை நோக்கி: நீ மிக விரைவில் மூன்று படி மாவைப் பிசைந்து, அடுப்புத் தணலில் அப்பங்களைச் சுடு என்றார்.
பிறகு வெண்ணெயையும் பாலையும் சமைக்கப்பட்ட கன்றுக் குட்டியையும் கொண்டு வந்து அவர்களுக்கு முன் வைத்து, அவர்களுக்குப் பக்கமாய் மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.
மூவருள் ஒருவர் அவரை நோக்கி: நாம் திரும்பும்போது இதே காலத்தில் உன்னிடத்திற்கு வருவோம். அப்போது நீயும் உயிரோடிருப்பாய்; சாறாளுக்கும் ஒரு மகன் இருப்பான் என்றார். கூடார வாயிலின் பின் புறமாய் நின்று கொண்டிருந்த சாறாள் இதைக் கேட்டுச் சிரித்தாள்.
கடவுள் செய்வதற்கு அரிதான காரியமும் உண்டோ? முன் சொன்னது போல், நாம் இதே காலத்தில் மறுபடியும் வருவோம். அப்போது நீயும் உயிரோடிருப்பாய்; சாறாளுக்கும் ஒரு மகன் இருப்பான் என்று சொன்னார்.
உண்மையிலே, ஆண்டவர் ஆபிரகாமுக்குத் திருவுளம் பற்றின எல்லாவற்றையும் ஆபிரகாமின் பொருட்டு நிறைவேற்றும்படி, அவன் தன் மக்களுக்கும் தனக்குப் பின்னால் வரும் தன் வீட்டாருக்கும் புத்திச் சொல்லி, நீங்கள் கடவுள் கட்டளையிட்ட நெறியில் ஒழுகி நியாயத்தையும் நீதியையும் கடைபிடிக்க வேண்டுமென்று கற்பிப்பான் என்று அறிவோம் (என்றார்).
நகருக்குள்ளே நீதிமான்கள் ஐம்பது பேர் இருந்தால், (பாவிகளோடு) கூட அவர்களும் அழிந்து போவார்களோ? அவ்விடத்திலே நீதிமான்கள் ஐம்பது பேர் இருப்பார்களாயின், அவர்கள் பொருட்டு அந்த இடத்தைக் காப்பாற்றமாட்டீரோ?
தீயவனோடு நீதிமானையும் அழிப்பதும், நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவதும் உமக்குத் தூரமாய் இருப்பதாக. அது உமக்கு உகந்ததன்று. மண்ணகம் முழுவதற்கும் நடுவராய் இருக்கிறீரே: இத்தகைய தீர்ப்பு நிச்சயம் செய்ய மாட்டீரே? (என்றார்).
ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருந்தாலும் இருக்கலாம். நாற்பத்தைந்து பேரைப் பாராது நகர் முழுவதையும் அழிப்பீரோ என்று கேட்க, கடவுள்: நாம் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அதனை அழிப்பதில்லை என்றார்.
அப்பொழுது ஆபிரகாம்: ஆண்டவரே, தயை புரியும். நான் பேசுவதினால் கோபிக்க வேண்டாம். முப்பது நீதிமான்கள் காணப்பட்டால் என்று கேட்க, அவர்: முப்பதுபேர் காணப்பட்டால் அதை அழியேன் என்று பதில் கூறினார்.
அவர்: நான் பேசத் தொடங்கிவிட்டேன்; எப்படியாவது என் ஆண்டவரிடம் இன்னும் ஒன்று கேட்கத் துணிவேன்: அவ்விடத்தில் இருபது நீதிமான்களே இருக்கக் கண்டால் என்ன என, அவர்: இருபது பேரானாலும் அதை நாம் அழிப்பதில்லை என்றார்.
அவர்: ஆண்டவரே, அருள் கூறும். அடியேன் இன்னும் ஒருமுறை மட்டும் கேட்கிறேன். ஆண்டவருக்கு கோபம் வேண்டாம். அவ்விடத்தில் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால் என, ஆண்டவர்: அந்தப் பத்துப் பேருக்காக அந்நகரை அழிக்க மாட்டோம் என்றார்.