Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 7 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 7 Verses

1 பூமியிலே பாடுபட மனிதனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? [QBR] அவனுடைய நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ? [QBR]
2 ஒரு வேலையாள் நிழலை விரும்பி, [QBR] ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல, [QBR]
3 மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி, [QBR] பிரச்சனையான இரவுகள் எனக்குக் குறிக்கப்பட்டது. [QBR]
4 நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? [QBR] இரவு எப்பொழுது முடியும் என்று சொல்லி, [QBR] விடியும்வரை உருண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்றுபோகிறது. [QBR]
5 என் உடல் பூச்சிகளினாலும், [QBR] அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; [QBR] என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று. [QBR]
6 என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது; [QBR] அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும். [QBR]
7 என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும், [QBR] என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும். [QBR]
8 இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; [QBR] உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன். [QBR]
9 மேகம் பறந்துபோகிறதுபோல, [QBR] பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். [QBR]
10 இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், [QBR] அவனுடைய இடம் இனி அவனை அறியாது. [QBR]
11 ஆகையால் நான் என் வாயை அடக்காமல், [QBR] என் ஆவியின் வேதனையினால் பேசி, [QBR] என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன். [QBR]
12 தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? [QBR] நான் ஒரு திமிங்கிலமோ? [QBR]
13 என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், [QBR] என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேன் என்றால், [QBR]
14 நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து, [QBR] தரிசனங்களால் எனக்கு பயமுண்டாக்குகிறீர். [QBR]
15 அதினால் என் ஆத்துமா, [QBR] நெருக்கப்பட்டு சாகிறதையும், [QBR] என் எலும்புகளுடன் உயிரோடிருக்கிறதைவிட, [QBR] மரணத்தையும் விரும்புகிறது. [QBR]
16 இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்; [QBR] எந்நாளும் உயிரோடிருக்க விரும்பமாட்டேன், என்னை விட்டுவிடும்; [QBR] என் நாட்கள் மாயைதானே. [QBR]
17 மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும், [QBR] அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், [QBR]
18 காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், [QBR] நிமிடந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், [QBR] அவன் எம்மாத்திரம்? [QBR]
19 நான் என் உமிழ்நீரை விழுங்காமல் எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், [QBR] என்னை விடாமலும் இருப்பீர். [QBR]
20 மனிதர்களைக் காப்பவரே, [QBR] பாவம்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? [QBR] நான் எனக்குத்தானே பாரமாயில்லாமல், [QBR] நீர் என்னை உமக்குக் குறியாக வைத்தது என்ன? [QBR]
21 என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? [QBR] இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; [QBR] விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இருக்கமாட்டேன்” என்றான். [PE]

Job 7:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×