Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 5 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 5 Verses

1 “இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? [QBR] பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்? [QBR]
2 கோபம் மூடனைக் கொல்லும்; [QBR] பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும். [QBR]
3 மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு [QBR] உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன். [QBR]
4 அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, [QBR] காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள். [QBR]
5 பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; [QBR] பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான். [QBR]
6 தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; [QBR] வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை. [QBR]
7 தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, [QBR] மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான். [QBR]
8 ஆனாலும் நான் தேவனை நாடி, [QBR] என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன். [QBR]
9 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத [QBR] அதிசயங்களையும் அவர் செய்கிறார். [QBR]
10 தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, [QBR] துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார். [QBR]
11 அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, [QBR] வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார். [QBR]
12 தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க, [QBR] அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார். [QBR]
13 அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; [QBR] தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும். [QBR]
14 அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, [QBR] மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள். [QBR]
15 ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், [QBR] பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார். [QBR]
16 அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; [QBR] தீமையானது தன் வாயை மூடும். [QBR]
17 இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; [QBR] ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். [QBR]
18 அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; [QBR] அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. [QBR]
19 ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; [QBR] ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. [QBR]
20 பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், [QBR] போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார். [QBR]
21 நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; [QBR] அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர். [QBR]
22 அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; [QBR] காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள். [QBR]
23 வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; [QBR] வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும். [QBR]
24 உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; [QBR] உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது [QBR] குறைவைக் காணமாட்டீர். [QBR]
25 உம்முடைய சந்ததி பெருகி, [QBR] உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். [QBR]
26 தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, [QBR] முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர். [QBR]
27 இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; [QBR] காரியம் இப்படியிருக்கிறது; [QBR] இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான். [PE]

Job 5:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×