Indian Language Bible Word Collections
Psalms 32:1
Psalms Chapters
Psalms 32 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 32 Verses
1
எவன் பாவம் போக்கப்பட்டதோ அவன் பேறு பெற்றவன்: எவன் பாவம் மறைக்கப்பட்டதோ அவனும் பேறு பெற்றவன்.
2
ஆண்டவர் எவன் மேல் பாவத்தைச் சுமத்தவில்லையோ அவன் பேறு பெற்றவன்: யாருள்ளத்தில் வஞ்சகம் இல்லையோ அவனும் பேறுபெற்றவன்.
3
என் பாவத்தை வெளியிடாது இருந்த வரையில் என் உடல் தளர்வுற்றது: ஓயாத என் பெருமூச்சுகளிடையே அது மெலிவுற்றது.
4
இரவும் பகலும் என்மேலே உம் கரம் ஓங்கி நின்றது: கோடை வறட்சி போல என் வலிமை வறண்டு போயிற்று.
5
என் பாவத்தை நான் உமக்கு வெளியிட்டேன்; என் குற்றத்தை நான் உம் திருமுன் மறைத்தேனில்லை: "ஆண்டவரிடம் என் பாவத்தை ஒப்புக்கொள்கிறேன்" என்றேன்; நீரும் என் குற்றத்தை மன்னித்தீர்.
6
இதனால் நல்லவர் யாவரும் உம்மை நோக்கி வேண்டுவர்: நெருக்கடியான வேளையில் அவர்கள் உம்மை மன்றாடுவார்கள். வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தாலும் அவர்களை நெருங்காது.
7
ஆண்டவரே, நீர் எனக்கு அடைக்கலமாய் உள்ளீர், இன்னல்கள் அனைத்தினின்றும் என்னைக் காத்தருள்வீர்: உம் மீட்பால் வரும் மகிழ்வாலே என்னை அணைக்கின்றீர்."
8
நான் உனக்கு அறிவு புகட்டுவேன், நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்: உனக்கறிவு தருவேன், உன்மேல் என் பார்வையைத் திருப்புவேன்" என்றீர்.
9
அறிவில்லாக் குதிரை போலும் கழுதை போலும் இருக்காதீர்: கடிவாளத்தால் அவற்றை அடக்க வேண்டும் அன்றோ! இல்லையெனில் நீங்கள் அவற்றை நெருங்க முடியாது.
10
பாவியின் துன்பங்கள் பல: ஆண்டவரை நம்புவோரை அவர்தம் இரக்கம் என்றென்றும் சூழ்ந்திடும்.
11
ஆண்டவரில் மகிழ்ந்திடுவீர், நீதிமான்களே களிகூர்ந்திடுவீர்: நேர்மையுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவரில் அக்களித்திடுவீர்.