Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 40 Verses

1 யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; [QBR] அவர் என்னிடமாகச் சாய்ந்து, [QBR] என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார். [QBR]
2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, [QBR] என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, [QBR] என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி, [QBR]
3 நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; [QBR] அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள். [QBR]
4 பெருமைக்காரர்களையும் பொய்யைச் [* தேவர்களையும்] சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல், [QBR] யெகோவாவையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான். [QBR]
5 என் தேவனாகிய யெகோவாவே, [QBR] நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது; [QBR] ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது. [QBR] நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள். [QBR]
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், [QBR] என் காதுகளைத் திறந்தீர்; [QBR] சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை. [QBR]
7 அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது; [QBR]
8 என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; [QBR] உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். [QBR]
9 மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; [QBR] என்னுடைய உதடுகளை மூடமாட்டேன், [QBR] யெகோவாவே, நீர் அதை அறிவீர். [QBR]
10 உம்முடைய நீதியை நான் என்னுடைய இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை; [QBR] உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; [QBR] உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவிக்காதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை. [QBR]
11 யெகோவாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்; [QBR] உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும். [QBR]
12 எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, [QBR] என்னுடைய அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் இருக்கிறது, [QBR] அவைகள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறது, [QBR] என்னுடைய இருதயம் சோர்ந்துபோகிறது. [QBR]
13 யெகோவாவே, என்னை விடுவித்தருளும்; [QBR] யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும். [QBR]
14 என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி, [QBR] எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக. [QBR]
15 என்னுடைய பெயரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், [QBR] தங்களுடைய வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக. [QBR]
16 உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; [QBR] உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று [QBR] எப்பொழுதும் சொல்வார்களாக. [QBR]
17 நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன், [QBR] யெகோவாவோ என்மேல் நினைவாக இருக்கிறார்; [QBR] தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்; [QBR] என் தேவனே, தாமதிக்க வேண்டாம். [PE]
×

Alert

×