Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 21 Verses

1 யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; [QBR] உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்! [QBR]
2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, [QBR] அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா) [QBR]
3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, [QBR] அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர். [QBR]
4 அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; [QBR] நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர். [QBR]
5 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது; [QBR] மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர். [QBR]
6 அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்; [QBR] அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். [QBR]
7 ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; [QBR] உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார். [QBR]
8 உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; [QBR] உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். [QBR]
9 உமது கோபத்தின் காலத்திலே [QBR] அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; [QBR] யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; [QBR] நெருப்பு அவர்களை அழிக்கும். [QBR]
10 அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் [QBR] அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர். [QBR]
11 அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; [QBR] தீவினை செய்ய முயன்றார்கள்; [QBR] ஒன்றும் வாய்க்காமல்போனது. [QBR]
12 உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர். [QBR]
13 யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; [QBR] அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம். [PE]
×

Alert

×