1
|
"யோபுவே, உன்னால் லிவியாதானை ஒரு தூண்டிலினால் பிடிக்க முடியுமா? அதன் நாவை உன்னால் ஒரு கயிற்றினால் கட்ட முடியுமா? |
2
|
யோபுவே, லிவியாதானின் மூக்கில் ஒரு கயிற்றை நுழைக்கமுடியுமா? அல்லது, அதன் தாடையில் ஒரு ஆணியைச் செருகமுடியுமா? |
3
|
யோபுவே, அதனை விடுதலைச் செய்யுமாறு லிவியாதான் உன்னை இரந்து வேண்டுமா? மென்மையான சொற்களால் அது உன்னோடு பேசுமா? |
4
|
யோபுவே, லிவியாதான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு என்றென்றும் உனக்குச் சேவை புரிய வாக்குறுதி தருமா? |
5
|
யோபுவே, நீ லிவியாதானோடு ஒரு பறவையிடம் விளையாடுவதைப்போன்று விளையாடுவாயா? உன் பணிப்பெண்கள் அதனோடு விளையாடுமாறு அதனை ஒரு கயிற்றால் கட்டுவாயா? |
6
|
யோபுவே, மீன் பிடிப்போர் உன்னிடமிருந்து லிவியாதானை வாங்க முயல்வார்களா? அவர்கள் அதைத் துண்டுகளாக்கி, வியாபாரிகளுக்கு அதை விற்பார்களா? |
7
|
யோபுவே, நீ லிவியாதானின் தோலோ அல்லது தலையிலோ ஈட்டியை எறிய (வீச) முடியுமா? |
8
|
யோபுவே, நீ லிவியாதானைத் தாக்க ஒரு முறை முயன்றால், பின்பு ஒருபோதும் அதனைச் செய்யமாட்டாய்! எத்தகைய யுத்தம் நடக்கும் என்பதைச் சற்றே யோசித்துப்பார்! |
9
|
நீ லிவியாதானைத் தோற்கடிக்க முடியுமென எண்ணினால் அதை மறந்துவிடு! எந்த நம்பிக்கையும் இல்லை! (நம்பிக்கையற்றுப்போவாய்)! அதைப் பார்த்தாலே பீதி (அச்சம்) விளையும்! |
10
|
அதனை எழுப்பிக் கோபமுறுத்த எந்த மனிதனுக்கும் தைரியம் (துணிவு) இல்லை. ஒருவனும் என்னை எதிர்த்து நிற்கமுடியாது! |
11
|
நான் (தேவன்) ஒருவனுக்கும் கடமைப்பட்டவன் அல்லன். பரலோகத்தின் கீழ் உள்ளவை அனைத்தும் எனக்குரியன. |
12
|
யோபுவே, லிவியாதானின் கால்களைப் பற்றியும் அதன் வலிமை, அழகிய வடிவம் ஆகியற்றைப் பற்றியும் நான் உனக்குக் கூறுவேன். |
13
|
ஒருவனும் அதன் தோலைக் குத்திப் பிளக்க முடியாது. அதன் தோல் ஒரு கேடயத்தைப் போன்றது! |
14
|
லிவியாதானின் தாடையைத் திறக்குமாறு செய்ய ஒருவனும் அதனை வற்புறுத்த முடியாது. அதன் வாயிலுள்ள பற்கள் ஜனங்களைப் பயமுறுத்தும். |
15
|
லிவியாதானின் முதுகில் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ள கேடய வரிசைகள் காணப்படும். |
16
|
அக்கேடயங்கள் காற்றும் நுழைய முடியாதபடி இறுகிப் பிணைந்திருக்கும், |
17
|
கேடயங்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும். அவை பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கும். |
18
|
லிவியாதான் தும்மும்போது, மின்னல் மின்னுவதைப் போன்றிருக்கும். அதன் கண்கள் உதயகால ஒளிபோல் பிரகாசிக்கும். |
19
|
அதன் வாயிலிருந்து தீப்பந்தங்கள் வெளிவரும். நெருப்புப் பொறிகள் வெளிப்படும். |
20
|
கொதிக்கும் பானையின் அடியில் எரியும் புதரைப்போல் லிவியாதானின் மூக்கிலிருந்து புகை கிளம்பும். |
21
|
லிவியாதானின் மூச்சு நிலக்கரியை எரிக்கும், அதன் வாயிலிருந்து நெருப்பு எழும்பும். |
22
|
லிவியாதானின் கழுத்து மிகுந்த வல்லமை கொண்டது. ஜனங்கள் பயந்து அதனிடமிருந்து ஓடிப்போகிறார்கள். |
23
|
அதன் தோலில் மிருதுவான பகுதி கிடையாது. அது இரும்பைப்போல கடினமானது. |
24
|
லிவியாதானின் இருதயம் பாறையைப் போன்றது. அதற்கு அச்சம் கிடையாது. (அது அஞ்சுவதில்லை). அது எந்திரத்தின் அடிக்கல்லைப்போல் கடினமாயிருக்கும். |
25
|
லிவியாதான் எழுகையில் வலியோர் அஞ்சுவார். லிவியாதான் வாலை வீசும்போது அவர்கள் ஓடிவிடுவர். |
26
|
வாட்கள், ஈட்டிகள், மற்றும் வல்லயம் லிவியாதானைத் தாக்கும். ஆனால் அவையே எகிறிவிழும். அக்கருவிகள் அதைக் காயப்படுத்துவதேயில்லை! |
27
|
லிவியாதான் இரும்பைப் புல்லைப் போல் உடைக்கும். உளுத்துப்போன (அரித்துப்போன) மரத்தைப்போன்று அது வெண்கலத்தை உடைக்கும். |
28
|
அம்புகள் லிவியாதானை ஓடச்செய்யாது, உலர்ந்த புல்லாய் பாறைகள் அதனின்று விலகிவீழும். |
29
|
பெருந்தடிகள் லிவியாதானைத் தாக்கும்போது, அவற்றை அது புல்லாய் உணரும். மனிதர் அதன் மீது ஈட்டிகளை எறியும்போது, அது சிரிக்கும். |
30
|
கடினமாக, கூரிய, உடைந்த, மட்பாண்டத்தின் துண்டுகளைப்போல், லிவியாதானின் உடம்பின் அடியிலுள்ள தோல் இருக்கும். தாற்றுக்கோலைப் போன்று அது சேற்றின் மீது அடையாளமிட்டுச் செல்லும். |
31
|
கொதிக்கும் பானையைப்போன்று லிவியாதான் தண்ணீரைக் கலக்குகிறது. பானையின் கொதிக்கும் எண்ணெயைப்போன்று அது குமிழிகளை எழுப்பும். |
32
|
லிவியாதான் நீந்தும்போது, அதன் பின்னே ஒரு பாதையை விட்டுச்செல்லும். அது தண்ணீரைக் கலக்கும், அதன் பின்னே வெண்மையான நுரையைத் தள்ளிச் செல்லும். |
33
|
லிவியாதானைப்போன்று உலகில் வேறெந்த மிருகமும் இல்லை. அச்சமின்றி படைக்கப்பட்ட மிருகம் அது. |
34
|
கர்வம் மிக்க மிருகங்களையும் லிவியாதான் நகைப்போடு பார்க்கும். அது எல்லா காட்டுமிருகங்களுக்கும் அரசன். கர்த்தராகிய நான் லிவியாதானைப் படைத்தேன்!" என்றார். |
Job 41:33 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...