நான் சரியான பாதைக்குப் புறம்பே நடந்தால், என் கண்கள் என் இருதயத்தை தீமைக்கு நேரே நடத்தினால், என் கைகளில் பாவத்தின் அழுக்குப் படிந்திருந்தால், அப்போது தேவன் அறிவார்,
பாலின உறவு சம்மந்தமான பாவம் அனைத்தையும் அழிக்கும்வரை எரியும் நெருப்பைப் போன்றது. நான் இதுவரைச் செய்த அனைத்தையும், எனது உடமைகள் யாவற்றையும் அது அழித்துவிடும்!
நான் அவர்களுக்கு எப்போதும் ஆடைகளைக் கொடுத்தேன். என் ஆடுகளின் மயிரைப் பயன்படுத்தி, அவர்கள் குளிர் நீங்கச் செய்தேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு என்னை ஆசீர்வதித்தார்கள்.
வாயிலில் ஒரு அநாதை வந்து உதவி வேண்டி நிற்கும்போது நான் என் கைமுட்டியை ஒருபோதும் ஆட்டியதில்லை. [*21ஆம் வசனம் நியாயசபையில் எனக்கு ஆதரவு இருந்தபோதும் நான் ஒரு அநாதையைப் பயமுறுத்தியதில்லை.]
நான் எப்போதேனும் அப்படிச் செய்திருந்தால், அப்போது என் கரம் தோளிலிருந்து விழுந்திருக்கும் என நான் நம்புகிறேன்! என் கரம் எலும்புக் குழியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்!
“நான் என் செல்வங்களில் நம்பிக்கை வைத்ததில்லை. எனக்கு உதவுவதற்காக நான் எப்போதும் தேவனையே நம்பியிருந்தேன். தூய பொன்னிடம், ‘நீயே என் நம்பிக்கை’ என்று நான் கூறியதில்லை,
நான் செல்வந்தனாக இருந்தேன். ஆனால் அது என்னைப் பெருமைக்காரனாக்கவில்லை! நான் மிகுதியான பொருளைச் சம்பாதித்தேன். ஆனால், என்னைச் சந்தோஷப்படுத்தியது அதுவல்ல!
ஜனங்கள் என்ன சொல்வார்களோ? என்று நான் அஞ்சியதில்லை. அந்த அச்சம் என்னை அமைதியாயிருக்கச் செய்ததில்லை. நான் வெளியே போகாமலிருக்க அது தடையாயிருக்கவில்லை. என்னை ஜனங்கள் வெறுப்பதற்கு (ஜனங்களின் வெறுப்புக்கு) நான் அஞ்சவில்லை.
“ஓ! யாரேனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்! நான் எனது நியாயத்தை விளக்கட்டும். சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குப் பதில் தருவார் என விரும்புகிறேன். நான் செய்தவற்றில் தவறென அவர் நினைப்பதை அவர் எழுதி வைக்கட்டும் என்று நான் விரும்புகிறேன்.
நான் அத்தீயக்காரியங்களை எப்போதேனும் செய்திருந்தால் அப்போது என் வயல்களில் கோதுமை, பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாக முள்ளும் களைகளும் முளைக்கட்டும்!” என்றான். யோபின் வார்த்தைகள் (சொற்கள்) முடிவடைந்தன.