Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Psalms Chapters

Psalms 2 Verses

Bible Versions

Books

Psalms Chapters

Psalms 2 Verses

1 ஜாதிகள் கொந்தளிப்பானேன்? ஐனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
2 கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
3 "அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்" என்கிறார்கள்.
4 பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
5 அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசுவார். தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.
6 "நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன்" என்றார்.
7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
8 என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
9 இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்" என்று சொன்னார்.
10 இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
11 பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

Psalms 2:3 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×