Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Numbers Chapters

Numbers 33 Verses

Bible Versions

Books

Numbers Chapters

Numbers 33 Verses

1 மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் சேனைகளின்படியே எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருடைய பிரயாணங்களின் விபரம்:
2 மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்ட பிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன:
3 முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர் எல்லாரும் பார்க்க, இஸ்ரவேல் புத்திரர் பெலத்தகையுடன் புறப்பட்டார்கள்.
4 அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன் பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள் தேவர்களின் பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்.
5 பின்பு இஸ்ரவேல் புத்திரர் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே பாளயமிறங்கினார்கள்.
6 சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்தரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.
7 ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்.
8 ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப் போய், ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்று நாள் பிரயாணம்பண்ணி, மாராவிலே பாளயமிறங்கினார்கள்.
9 மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே பாளயமிறங்கினார்கள்.
10 ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே பாளயமிறங்கினார்கள்.
11 சிவந்த சமுத்திரத்தை விட்டுப் பறப்பட்டுப்போய், சீன் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
12 சீன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே பாளயமிறங்கினார்கள்.
13 தொப்காவிலிருந்து புறப்பட்டுப் போய், ஆலூசிலே பாளயமிறங்கினார்கள்.
14 ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள். அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
15 ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
16 சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
17 கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
18 ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே பாளயமிறங்கினார்கள்.
19 ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே பாளயமிறங்கினார்கள்.
20 ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே பாளயமிறங்கினார்கள்.
21 லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே பாளயமிறங்கினார்கள்.
22 ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
23 கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே பாளமிறங்கினார்கள்.
24 சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே பாளயமிறங்கினார்கள்.
25 ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே பாளயமிறங்கினார்கள்.
26 மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே பாளயமிறங்கினார்கள்.
27 தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே பாளயமிறங்கினார்கள்.
28 தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே பாளயமிறங்கினார்கள்.
29 மித்காவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
30 அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
31 மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள்.
32 பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
33 கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
34 யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
35 எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே பாளயமிறங்கினார்கள்.
36 எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
37 காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
38 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.
39 ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்து மூன்று வயதாயிருந்தான்.
40 அந்நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் புத்திரர் வருகிறதைக் கேள்விப்பட்டான்.
41 ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
42 சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே பாளயமிறங்கினார்கள்.
43 பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.
44 ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.
45 அந்த மேடுகளை விட்டுப்பறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள்.
46 தீபோன்காத்திலிருந்து புறப்புட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே பாளயமிறங்கினார்கள்.
47 அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே பாளயமிறங்கினார்கள்.
48 அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.
49 யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்.
50 எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:
51 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,
52 அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,
53 தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.
54 சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.
55 நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.
56 அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல் என்றார்.

Numbers 33:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×