Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Numbers Chapters

Numbers 29 Verses

Bible Versions

Books

Numbers Chapters

Numbers 29 Verses

1 ஏழாம் மாதம் முதல் தேதி பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; அது உங்களுக்கு எக்காளமூதும் நாளாயிருக்கவேண்டும்.
2 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
3 அவைகளுக்கு அடுத்த போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
4 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
5 உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,
6 மாதப்பிறப்பின் சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், தினந்தோறும் இடும் சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் அன்றி, இவைகளையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.
7 இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதிலே நீங்கள் யாதொரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி,
8 கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
9 அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
10 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
11 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரணபலியையும், நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.
12 ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழு நாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள்.
13 நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்கதகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
14 அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும்,
15 பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
16 நித்திய தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
17 இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
18 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
19 நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
20 மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
21 காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
22 நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
23 நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
24 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
25 நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
26 ஐந்தாம் நாளிலே ஒன்பது காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
27 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
28 நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
29 ஆறாம் நாளிலே எட்டுக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
30 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
31 நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
32 ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
33 காளைகளும், ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
34 நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
35 எட்டாம் நாள் உங்களுக்கு விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
36 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள தகனமான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
37 காளையும், ஆட்டுக்கடாவும், ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
38 நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
39 உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் சர்வாங்கதகனபலிகளையும், உங்கள் போஜனபலிகளையும், உங்கள் பானபலிகளையும், உங்கள் சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.
40 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்.

Numbers 29:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×