வயது முதிர்ந்தவர்கள் மிதமிஞ்சிக் குடியாமல், கண்ணியமும் விவேகமும் உள்ளவர்களாய் விசுவாசம், அன்பு, மன உறுதி இவற்றைப் பழுதின்றிக் காத்துக்கொள்ளச் சொல்லும்.
தங்கள் வீட்டு வேலையைக் கவனித்துக் கொண்டு விவேகம், கற்பு, இரக்கமனம், கணவர்க்குப் பணிவு ஆகிய நற்பண்புகளைக் கொண்டவர்களாய் இருக்கும்படி அவ்வயதான பெண்கள் கற்பிப்பார்களாக. அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது.
சிறுகளவும் செய்யாமல், நடத்தையில் நல்லவர்கள், முழு நம்பிக்கைக்குரியவர்கள் எனக் காட்டுவார்களாக. இவ்வாறு அவர்கள், கடவுளாகிய நம் மீட்பருடைய போதனைக்கு எல்லா வகையிலும் அணிகலனாய் இருப்பார்கள்.
இவ்வாறு வாழும் நாமோ, மகத்துவமிக்க கடவுளும், நம் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சிமை பிரசன்னமாவதால், மகிழ்வளிக்கும் நம்முடைய நம்பிக்கை நிறைவேறுமென எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இவர் நம்மை எல்லா அக்கிரமத்திலிருந்தும் மீட்கவும், நம்மைத் தூயவர்களாக்கி, நற்செயல்களில் ஆர்வமுள்ள ஓரினமாகத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவும் தம்மை நமக்காகக் கையளித்தார்.