நம் இருவருக்கும் பொதுவான விசுவாச வாழ்வில் என் உண்மை மகனான உமக்கு, பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும், நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் சமாதானமும் உண்டாகுக!
கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களுக்கு விசுவாசம் உண்டாகவும், பக்தி நெறிக்கு ஏற்ற உண்மையை அவர்கள் அறிந்து கொள்ளவும், முடிவில்லா வாழ்வின் நம்பிக்கையில் அவர்கள் நிலைபெறவுமே நான் அனுப்பப்பெற்றேன்.
இவ்வாழ்வை எல்லாக் காலங்களுக்கு முன்பே பொய்யாக் கடவுள் தாமே வாக்களித்தார். அதற்கொப்ப, குறிப்பிட்ட காலத்தில் நற்செய்தியறிவிப்பின் வாயிலாகத் தம் வார்த்தையை அவர் வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியறிவிப்பு நம் மீட்பராகிய கடவுளின் கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான் திருத்தாமல் விட்டு வந்ததை நீர் சீர்திருத்தவும், நான் உமக்குப் பணித்தவாறு நகரந்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தவும் வேண்டியே, உம்மைக் கிரேத்தா தீவிலே விட்டு வந்தேன்.
நீர் ஏற்படுத்தும் மூப்பர்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருத்தல் வேண்டும் ஒருமுறை மட்டுமே திருமணமானவராக இருக்கவேண்டும் அவர்களுடைய மக்கள் விசுவாசிகளாக இருக்கவேண்டும்; இவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று பெயரெடுத்தவர்களாகவோ, அடங்காதவர்களாகவோ இருத்தல் ஆகாது.
ஏனெனில், கட்டுக்கடங்காதவர், வீண் வாதம் செய்பவர், மோசக்காரர் பலர் இருக்கின்றனர். இவர்களுள் பெரும்பாலோர் யூத மதத்திலிருந்து வந்தவர்களாயிருப்பர். இவர்களுடைய வாயை அடக்க வேண்டும்.
தூய உள்ளத்தோருக்கு எல்லாம் தூயவையே மாசுள்ள மனத்தினருக்கும், விசுவாசம் இல்லாதவர்க்கும் எதுவுமே தூயதாயிராது. அவர்களுடைய மனமும் மனச் சாட்சியும் கூட மாசுள்ளவையாயிருக்கின்றன.
கடவுளை அறிந்திருப்பதாக அவர்கள் வாயால் சொல்லுகின்றனர்; ஆனால், நடத்தையால் அவரை மறுக்கின்றனர்; அடங்காத இந்த மனிதர்கள் அருவருப்புக்குரியவர்கள்; எந்த நற்செயலுக்கும் தகுதியற்றவர்கள்.