அவர்களே கடவுளின் மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள், அவர்களிடையில் தான் இறைவன் தம் மாட்சிமையை விளங்கச் செய்தார், உடன்படிக்கைகளும் திருச்சட்டமும், இறை வழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடம்தான் ஒப்படைக்கப்பட்டன.
குலத் தந்தையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள்; மனிதன் என்ற முறையில் கிறிஸ்துவும் அவர்களினின்றே தோன்றினார். இவரோ எல்லாவற்றிற்கும் மேலான கடவுள், என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.
ஆபிரகாமின் வழிவந்தவர்கள் அனைவருமே அவருடைய பிள்ளைகள் அல்லர்; மறை நூலில், 'உன் பெயரைத் தாங்க உன் வழிவந்தோர் ஈசாக்கின் வழியாய்த்தான் பிறப்பர்' என்று உள்ளதன்றோ?
அதாவது இயல்பு முறைப்படி பிறந்த பிள்ளைகள் கடவுளின் பிள்ளைகள் அல்லர்; வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகளே ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.
அவ்வாறே, ' யாக்கோபின் மேல் அன்பு கூர்ந்தேன். ஏசாவை வெறுத்தேன் ' என்று எழுதியுள்ளது. தாமே விரும்பித் தேர்ந்தெடுப்பதே கடவுளுடைய திட்டத்துக்கு அடிப்படை; மனிதர் செய்யும் செயல்களின்படி அன்று, அழைக்கும் இறைவனின் செயலின்படியே அத்திட்டம் நிறைவேறுமாறு அங்ஙனம் நிகழ்ந்தது.
ஏனெனில் அவரே மோயீசனிடம், ' எவனுக்கு இரக்கம் காட்டவிரும்புகிறேனோ, அவனுக்கு இரக்கம் காட்டுவேன்; எவனுக்குக் கருணைபுரிய விரும்புகிறேனோ, அவனுக்கு கருணை புரிவேன் ' என்கிறார்.
கடவுளின் செயலும் இத்தகையதே. தமது சினத்தைக் காட்டவும், தமது வல்லமையைத் தெரியப்படுத்தவும் அவர் விரும்பியபோதிலும், அழிவுக்கும் அவருடைய சினத்துக்கும் இலக்கான கலன்கள் மட்டில் கடவுள் மிக்க பொறுமையாய் இருந்தாராயின், யார் என்ன சொல்ல முடியும்?
மேலும் இசையாஸ் முன்னுரைத்ததுபோல்: ' வான் படைகளின் ஆண்டவர் நமக்கு வேராகிலும் விட்டு வைத்திராவிடில், சோதோமைப் போல் ஆகியிருப்போம், கொமோராவுக்கு ஒப்பாகியிருப்போம். '
அப்படியானால், இதன் முடிவென்ன? புறவினத்தார் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக முயற்சி செய்யாத போதிலும் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டார்கள். அப்படி ஏற்புடையவர்கள் ஆனதோ விசுவாசத்தினாலே.