முற்காலத்தில் எழுதப்பட்ட மறைநூல் வாக்குகள் நமக்குப் போதனையாகவே எழுதப்பட்டன; மறைநூல்கள் தரும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நமக்கு நம்பிக்கை உண்டாகவேண்டும் என்பதே அவற்றின் நோக்கம்.
முன்னோர்க்குச் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கடவுள் உண்மை உள்ளவர் எனக் காட்டவும், புறவினத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரை மகிமைப் படுத்தவுமே கிறிஸ்து விருத்தசேதனமுள்ளோருக்குப் பணியாளரானார்.
இதுவே என் துணிபு! இப்புறவினத்தாரைக் குறித்து மறை நூலிலும், ' ஆகையால் புறவினத்தார் நடுவில் உம்மைப் புகழ்வேன், உம்முடைய பெயருக்குப் பண்பாடுவேன்.' என எழுதியுள்ளது. இன்னும்,
பரிசுத்த ஆவியின் வல்லமையால் உங்களில் நம்பிக்கை பெருகும்படி, நம்பிக்கை தரும் கடவுள், விசுவாசத்தால் உண்டாகும் எல்லா வகையான மகிழ்ச்சியாலும் அமைதியாலும் உங்களை நிரப்புவாராக.
என் சகோதரர்களே! நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், ஒருவர்க்கு ஒருவர் அறிவு புகட்டக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.
ஆயினும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் இக்கடிதத்தின் சில பகுதிகளில் மிகத் துணிவுடன் எழுதியுள்ளேன்; நான் கடவுளின் தனிப்பட்ட அருளைப் பெற்றவன் என்பதால் தான் அவ்வாறு எழுதினேன்.
அந்த அருள் தான் என்னைப் புறவினத்தாருக்காகக் கிறிஸ்து இயேசுவின் திருத்தொண்டனாக்கிற்று. புறவினத்தார் பரிசுத்த ஆவியால் அர்ச்சிக்கப் பட்டதும், இறைவனுக்கு உகந்ததுமான காணிக்கை ஆகும்படி கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே நான் செய்யும் திருத்தொண்டு; அதுவே என் குருத்துவப்பணி.
புறவினத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும், அருங்குறிகள் அற்புதங்களின் வல்லமையாலும், தேவ ஆவியின் வல்லமையாலும் செய்து முடித்தவற்றைத் தவிர,
வேறெதைப்பற்றியும் பேச நான் துணியேன். இவற்றின் விளைவாக, யெருசலேமில் தொடங்கி, அதனை மையமாகக் கொண்டு, இல்லிரிக்கம் நாடு வரை எங்கணும் சுற்றிக் கிறிஸ்துவின் நற் செய்தியை அறிவிக்கும் பணியை முடித்து விட்டேன்.
கிறிஸ்துவின் பெயர் கேள்விப் படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே பெருமையெனக் கருதினேன்; ஏனெனில், வேறொருவர் இட்ட அடிப்படை மீது கட்டிடம் எழுப்ப நான் விரும்ப வில்லை.
இப்பொழுதோ இந்தப் பகுதிகளில் எனக்கு இனி வேலையில்லை. மேலும் ஸ்பெயின் நாட்டுக்குப் போகும் போது உங்களைக் காணலாம் என்கிற பேரவா கடந்த பல ஆண்டுகளாக எனக்கு இருந்து வருகிறது;
எனவே, போகும் வழியில் நான் உங்களைக் கண்டு, சில நாட்களேனும் உங்களோடு இருந்து, மனநிறைவு பெற்றபின், என்னை அங்கிருந்து நீங்கள் வழி அனுப்புவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.
ஆம், தாங்களாகவே முன் வந்தனர்; யெருசலேமில் உள்ள இறைமக்களுக்கு உண்மையில் இவர்கள் கடன்பட்டவர்களே. ஏனெனில் ஆவியைச் சார்ந்த கொடைகளில் புறவினத்தார் அவர்களின் பங்காளிகள் ஆயினரெனில், உடலைச் சார்ந்த தேவைகளில் அவர்களுக்குத் தொண்டு செய்ய இவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லரோ?
சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும் ஆவியானவர் ஏவும் அன்பை முன்னிட்டும் நான் உங்களைக் கேட்டுக்கொள்வது: எனக்காகக் கடவுளிடம் செபித்து, என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள்.
யூதேயாவில் விசுவாசத்தை ஏற்காதவர்களிடமிருந்து இறைவன் என்னை விடுவிக்கும்படியும், நான் யெருசலேமில் செய்யப்போகும் திருப்பணி இறைமக்களுக்கு ஏற்றதாய் இருக்கும்படியும்,