வேறொரு வானதூதர் பொன் தூபக்கால் ஒன்றை ஏந்திக்கொண்டு பீடத்தின்முன் வந்து நின்றார். அரியணை முன் நிற்கும் பொற்பீடத்தின்மேல், இறைமக்கள் அனைவருடைய செபக் காணிக்கைக்குத் தூபமிடுமாறு, அவருக்கு ஏராளமான சாம்பிராணி அளிக்கப்பட்டது.
முதல் வானதூதர் ஊதினார். இரத்தம் கலந்த கல் மழையும் நெருப்பும் உண்டாகி, மண்மீது பெய்தது. மண்ணில் மூன்றிலொரு பாகம் எரிந்துபோயிற்று; மரங்களில் மூன்றிலொரு பாகம் தீய்ந்துபோயிற்று; பசும் புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.
மூன்றாவது வானதூதர் எக்காளத்தை ஊதினார். பெரியதொரு விண்மீன் தீப்பந்தம் போல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே வானினின்று பாய்ந்து, ஆறுகளில் மூன்றிலொரு பாகத்திலும் நீரூற்றுகளிலும் விழுந்தது.
நான்காவது வானதூதர் எக்காளத்தை ஊதினார். கதிரோனில் மூன்றிலொரு பாகமும், நிலாவில் மூன்றிலொரு பாகமும், விண்மீன்களுள் மூன்றிலொரு பாகமும் தாக்குண்டன. அதனால் அவற்றில் மூன்றிலொரு பாகம் இருளடைந்தது. பகலொளி மூன்றிலொரு பாகம் குறைந்தது; இரவுக்கும் அப்படியே ஆயிற்று.
பின்பு நான் கண்ட காட்சியில், வானத்தில் உயரப் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு உரத்த குரலில், "இன்னும் மூன்று வானதூதர்கள் எக்காளம் ஊதப்போகிறார்கள். அதனால், மண்ணுலகில் வாழ்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ கேடு" என்று கத்தியது.