பின் வல்லமைமிக்க இன்னொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். அவர் மேகத்தை ஆடையென அணிந்திருத்தார். அவர் தலைமேல் ஒரு வானவில் இருந்தது. முகம் கதிரவனைப்போலவும், கால்கள் நெருப்புத் தூண்கள்போலவும் இருந்தன.
அவர் கையில் சிறியதோர் ஏட்டுச் சுருள் பிரித்திருந்தது. வலக்காலைக் கடலின்மீதும், இடக்காலைத் தரையின் மீதும் வைத்து கர்ச்சிக்கும் சிங்கம்போல முழக்கம் செய்தார்.
ஏழு இடிகளும் அப்படிப் பேசியபோது நான் எழுதப்போனேன். ஆனால் விண்ணிலிருந்து வெளிவந்த ஒரு குரல், "ஏழு இடிகளும் பேசியதை மறைத்து வை, எழுதாதே" என்று சொல்லக் கேட்டேன்.
விண்ணையும் அதில் உள்ளதையும், மண்ணையும் அதில் உள்ளதையும், கடலையும் அதில் உள்ளதையும், படைத்தவரும் என்றென்றும் வாழ்பவருமானவரின் பெயரால் ஆணையிட்டு, "இனித்தாமதம் இராது.
ஏழாவது வானதூதர் எக்காளம் ஊதும் நாளில் கடவுளின் மறைவான திட்டம் நிறைவேறியிருக்கும். இறைவாக்கினரான தம் ஊழியர்களுக்குக் கடவுள் அறிவித்த நற்செய்தியின்படியே அவை நிறைவேறும்" என்றர்.
விண்ணினின்று நான் கேட்ட குரல் என்னிடம் திரும்பவும் பேசி, "கடல்மீதும் தரைமீதும் நிற்கிற வானதூதரின் கையிலுள்ள பிரித்த ஏட்டுச் சுருளை நீ போய் வாங்கிக்கொள்" என்றது.
நானும் அந்த வானதூதரிடம் போய், அந்த ஏட்டுச் சுருளை எனக்குத் தரும்படி கேட்டேன். அவரோ, "இதை எடுத்துத் தின்றுவிடு. இது உன் வயிற்றில் கசக்கும். ஆனால் வாயிலே தேனைப்போல் இனிக்கும்" என்று என்னிடம் சொன்னார்.