Indian Language Bible Word Collections
Psalms 95:2
Psalms Chapters
Psalms 95 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 95 Verses
1
|
வாருங்கள், ஆண்டவர்க்குப் புகழ் பாடுவோம்: மீட்பளிக்கும் பாறையாம் அவருக்கு அக்களிப்புடன் பாடுவோம். |
2
|
புகழ்ப்பாக்கள் இசைத்துக் கொண்டு அவர் திருமுன் செல்வோம்: இன்னிசைப் பாடல்களுடன் அவர் முன்னிலையில் அகமகிழ்வோம். |
3
|
ஏனெனில், ஆண்டவர் மகத்துவமிக்க கடவுள்: தேவர் அனைவருக்கும் பேரரசர். |
4
|
பூமியின் ஆழ்ந்த பகுதிகள் அவர் கையில் உள்ளன. உன்னத மலைகளும் அவருக்கு உரியவையே. |
5
|
கடலும் அவருடையதே, அவரே அதைப் படைத்தவர்: உலர்ந்த தரையும் அவருடையது, அவர் கரங்களே அதை உருவாக்கின. |
6
|
வாருங்கள் ஆராதிப்போம், தெண்டனிடுவோம், வணங்குவோம்: நம்மைப் படைத்த ஆண்டவர் முன் முழுந்தாளிடுவோம். |
7
|
அவரே நம் கடவுள், நாமோ அவரால் மேய்க்கப்படும் மக்கள், அவர் அரவணைப்பிலுள்ள மந்தை: இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களா? அக்குரல் கூறுவதாவது: |
8
|
அன்று மெரிபாவிலும் பாலை வெளியில் மாசாவிலும் நிகழ்ந்ததுபோல், உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். |
9
|
அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தனர்: என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதனைக்குட்படுத்தினர். |
10
|
நாற்பது ஆண்டளவாக இற்த மக்களை நான் பொறுத்துக் கொண்டேன்: தவறிழைக்கும் இதயமுள்ள மக்கள் இவர்கள் என் வழிகளை அறியவில்லை. |
11
|
எனவே என் இளைப்பாற்றியை அடைய மாட்டார்கள் என்று, சினமேலீட்டால் சபதம் செய்தேன்". |