Indian Language Bible Word Collections
Psalms 7:4
Psalms Chapters
Psalms 7 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 7 Verses
1
என் இறைவனாம் ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்: என்னைத் துன்புறுத்துவோர் அனைவரிடமிருந்தும் எனக்கு மீட்பும் விடுதலையும் அளித்தருளும்.
2
எவனும் சிங்கத்தைப் போல என் உயிரைப் பறித்துக் கொள்ள விடாதேயும்: விடுவிப்பவன் எவனுமின்றி என்னை இழுத்துக் கொண்டு போக விடாதேயும்.
3
என் இறைவனாகிய ஆண்டவரே, இப்படி நான் செய்திருந்தால்: அதாவது, என் கைகளால் அநீதி செய்திருந்தால்,
4
காரணமின்றி எனக்குத் தீங்கிழைத்தவனையே காப்பாற்றிவரும் நான், என் நண்பனுக்குத் தீமை செய்திருந்தேனென்றால்,
5
பகைவன் என்னைத் துரத்திப் பிடித்து என் உயிரை நசுக்கி விடுவானாக: என் பெயரைக் கொடுத்துப் பாழ்படுத்துவனாக.
6
ஆண்டவரே, சினங்கொண்டு நீர் எழும்புவீராக: என்னைத் துன்புறுத்துவோர் சினத்தை எதிர்த்து எழும்புவீராக. என் சார்பாக நீதியை நிலைநாட்ட எழும்புவீராக: அந்த நீதியை வழங்கியவர் நீரேயன்றோ!
7
மக்களினத்தார் உம்மைச் சூழ்ந்துகொள்வார்களாக: அவர்களனைவர் மீதும் உன்னதங்களில் நீர் வீற்றிருப்பீராக.
8
மக்களுக்கு நீதிபதியாயிருப்பவர் ஆண்டவரே: உமது நீதிக்கேற்ப ஆண்டவரே, எனக்கு நீதி வழங்கும்; எனது மாசின்மைக்கேற்ப எனக்கு நீதி வழங்கும்.
9
தீயவர்களுடைய தீய மனம் ஒழிவதாக: உள்ளத்தையும் உள்ளுறுப்புகளையும் ஆய்ந்தறிபவரே, நீதியுள்ள இறைவனே, நல்லவனை நீர் நிலைநிறுத்தும்.
10
கடவுளே எனக்குக் கேடயம்: நேரிய மனத்தோரைக் காப்பவர் அவரே.
11
நேர்மையுள்ள நீதிபதியாய் உள்ளார் கடவுள்: நாள்தோறும் சினங்கொள்ளும் இறைவன் அவர்.
12
பாவிகள் மனந்திரும்பாவிட்டால் தம் வாளைக் கூர்மையாக்குவார்: வில்லை நாணேற்றி எய்யத் தொடங்குவார்.
13
சாவுக்குரிய ஆயுதங்களை அவர்களுக்கு ஆயத்தம் செய்வார்: தம் அம்புகளை அனல் கக்கச் செய்வார்.
14
பாவியானவன் தீமையைக் கருத்தரிக்கிறான்: தீவினையைக் கருவாய்க் கொண்டிருக்கிறான், வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறான்.
15
குழியைப் பறிக்கிறான், அதை ஆழமாக்குகிறான்: தான் பறித்த குழியில் தானே விழுகிறான்.
16
அவன் செய்த தீமை அவன் தலைமேலேயே வந்து விழும்: அவன் செய்த கொடுமை அவன் மேலேயே படும்.
17
நானோவெனில் ஆண்டவருடைய நீதியை நினைத்து அவரைப் புகழ்வேன்: உன்னதரான ஆண்டவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.